40 எல்.எல்.ஏக்களை தட்டித்தூக்கும் உதயநிதி... மு.க.ஸ்டாலினை மிஞ்சி அதிரடி..!

Published : Jul 20, 2019, 12:22 PM IST
40 எல்.எல்.ஏக்களை தட்டித்தூக்கும் உதயநிதி... மு.க.ஸ்டாலினை மிஞ்சி அதிரடி..!

சுருக்கம்

உதயநிதி இளைஞரணி பொறுப்புக்கு வந்து 30 நாட்கள் கூட ஆகவில்லை. ஆனாலும் அனைத்து அதிகாரங்களையும் தட்டித்தூக்கி வருகிறார். இதனால் சீனியர்கள் கலக்கமடைந்து வருகின்றனர்.  

வேலுார் மக்களவை தேர்தலில் திமுக மாவட்ட நிர்வாகிகளுடன், இளைஞரணி நிர்வாகிகளையும் சேர்த்து, வேலை செய்ய சொல்லி உத்தரவிட்டு இருக்கிறார்கள்.

 

உதயநிதி உத்தரவால், இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு, மாவட்ட மூத்த நிர்வாகிகள் முக்கியத்துவம் தர ஆரம்பித்து இருக்கிறார்கள். அதே நேரம் இளைஞர் அணியில் மூன்று எம்.பி.,க்களும், ஆறு எம்.எல்.ஏ.,க்களும் இப்போது இருக்கிறார்கள். ஆகையால், இளைஞர் அணியை பலப்படுத்தும் வகையில் வரும் சட்டசபை தேர்தலில் 40 எம்.எல்.ஏ.,க்களை, இளைஞரணியில் இருந்து தேர்வு செய்ய, உதயநிதி திட்டமிட்டு இருக்கிறார். 

கட்சியே அவரிடம் சென்று விட்ட பிறகு 100 எம்.எல்.ஏ.,க்களை, இளைஞர் அணிக்கு எடுத்துக் கொண்டாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. மு.க.ஸ்டாலின் முப்பது ஆண்டுகளாக இளைஞரணியில் இருந்தபோதுகூட அவர் இத்தனை ஆதிக்கம் செலுத்தியது இல்லை. ஆனால் உதயநிதி இளைஞரணி பொறுப்புக்கு வந்து 30 நாட்கள் கூட ஆகவில்லை. ஆனாலும் அனைத்து அதிகாரங்களையும் தட்டித்தூக்கி வருகிறார். இதனால் சீனியர்கள் கலக்கமடைந்து வருகின்றனர்.  

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!