கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் அதிரடி மாற்றம்... தமிழ்நாட்டைச் சேர்ந்த டி. ராஜா தேர்வாகிறார்..?

By vinoth kumarFirst Published Jul 20, 2019, 12:15 PM IST
Highlights

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளராக தமிழ்நாட்டைச் சேர்ந்த டி. ராஜா தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளராக தமிழ்நாட்டைச் சேர்ந்த டி. ராஜா தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இடதுசாரி இயக்கங்களில் முக்கிய கட்சியாக இருப்பது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. இந்த கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளராக இருப்பவர் சுதாகர் ரெட்டி.  இவர் கடந்த இரண்டு முறையாக கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக பணியாற்றி வருகிறார். 

இந்நிலையில் தனது உடல் நிலையை காரணம் காட்டி கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு வேறு ஒருவரை நியமிக்க வேண்டுமென கடந்த ஓராண்டாக சுதாகர் ரெட்டி வலியுறுத்தி வருகிறார். இதன் தொடர்ச்சியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளராக இருப்பவர் தமிழகத்தை சேர்ந்த டி. ராஜா தற்போது மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.

டி. ராஜா கடந்த 20 வருடங்களாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய தலைமையில் பணியாற்றி வருகிறார்.  பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி தனக்கு சளித் தொந்தரவு அதிகம் இருப்பதால் ஓய்வு கொடுக்க வேண்டும் என கட்சியின் செயற்குழுவில் கேட்டுக்கொண்டதோடு பொதுச்செயலாளர் பொறுப்பிற்கு டி. ராஜாவை பரிந்துரை செய்கிறேன் என கூறியிருக்கிறார். அதன்படி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் இன்று டெல்லியில் நடக்கிறது. அப்போது டி. ராஜா அகில இந்திய பொதுச்செயலாளராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

click me!