100 நாட்கள் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கும் உதயநிதி ஸ்டாலின்... கருணாநிதி சமாதியில் முதல் மரியாதை..!

By Asianet TamilFirst Published Nov 19, 2020, 8:30 PM IST
Highlights

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 100 நாட்கள் தேர்தல் பிரசாரத்தை நாளை முதல் தொடங்க உள்ள நிலையில், அண்ணா, கருணாநிதி சமாதிகளில் மரியாதை செலுத்தினார்.
 

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் வேளையில், ஒவ்வொரு கட்சியும் பரபரப்பாகிவருகின்றன. அதிமுகவில் முதல்வர் வேட்பாளரை அறிவித்து தேர்தல் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. திமுகவில் தேர்தல் அறிக்கை பணிகள் தொடங்கப்பட்டு, காணொலி மூலம் தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டங்களில் கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று வருகிறார். பாஜக வேல் யாத்திரை நடத்திவரும் நிலையில், காங்கிரஸ் ஏர் கலப்பை பேரணியை நடத்த  திட்டமிட்டுள்ளது.


இந்நிலையில் திமுக சார்பில் அக்கட்சியின் இளைரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், 100 நாள் தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தைத் தொடங்க உள்ளார். முதல் கட்டமாக  டெல்டா மாவட்டங்களில் பிரசாரத்தை மேற்கொள்ள உள்ளார் உதயநிதி. மறைந்த திமுக முன்னாள் தலைவர் மு.கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளையிலிருந்து தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குகிறார். இதற்காக சென்னையிலிருந்து திருவாரூர் செல்கிறார் உதயநிதி. 
100 நாள் தேர்தல் பிரசாரத்தை உதயநிதி ஸ்டாலின் தொடங்க உள்ள நிலையில், இன்று மாலை அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்கு உதயநிதி வருகை புரிந்தார். நினைவிடங்களில் மரியாதையும் செலுத்தினார்.
 

click me!