வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளும் பணி தீவிரம்: 10 ஐஏஎஸ் அதிகாரிகளுடன் சத்ய பிரத சாகு ஆலோசனை.

Published : Nov 19, 2020, 04:33 PM IST
வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளும் பணி தீவிரம்: 10 ஐஏஎஸ் அதிகாரிகளுடன் சத்ய பிரத சாகு ஆலோசனை.

சுருக்கம்

வாக்காளர் பட்டியல் சுருக்கி திருத்தம் செய்யும் பணியை பார்வையிடுவதற்காக இந்திய தேர்தல் ஆணைய உத்தரவுப்படி தமிழகத்தில் பணியாற்றும் 10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சிறப்பு பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளும் பணியை கண்காணிக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளோடு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார். வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் 2020-ம் ஆண்டு ஜனவரி 20-ந்தேதி வெளியிடப்பட உள்ளது. வாக்காளர் பட்டியல் சுருக்கி திருத்தம் செய்யும் பணியை பார்வையிடுவதற்காக இந்திய தேர்தல் ஆணைய உத்தரவுப்படி தமிழகத்தில் பணியாற்றும் 10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சிறப்பு பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். 

தமிழக போக்குவரத்து கமிஷனர் சி.சமயமூர்த்தி, பத்திரப்பதிவுத்துறை ஐ.ஜி. பி.ஜோதி நிர்மலா சாமி, எல்காட் நிர்வாக இயக்குனர் எம். விஜயகுமார், தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவன நிர்வாக இயக்குனர் எஸ்.சிவசண்முகராஜா, சிட்கோ கூடுதல் கமிஷனர் வி.பி.ராஜேஷ், தமிழ்நாடு கடல்வாரிய துணைத்தலைவர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் வி.சம்பத், கைத்தறி மற்றும் ஜவுளித்துறை இயக்குனர் எம். கருணாகரன், காதி மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்தின் முதன்மை செயலர் எஸ்.நடராஜன், தாட்கோ நிர்வாக இயக்குனர் சாஜன்சிங் ஆர்.சவான், கால்நடை வளர்ப்பு மற்றும் சேவை துறை இயக்குனர் ஏ.ஞானசேகரன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். 

ஒவ்வொருவருக்கும் தலா 3 மாவட்டங்கள் வீதம் பிரித்து வழங்கப்படுகிறது. இந்த மாவட்டங்களில் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணியை மேற்பார்வையிட உள்ளனர். வாக்காளர் பட்டியலை திருத்தம் செய்ய 1 மாதம் வரை அவகாசம் இருப்பதால் பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர், புகைப்படம், தொலைபேசி எண், முகவரி போன்ற தகவல்கள் சரியாக இருக்கிறதா? என்பதை பார்த்து திருத்தம் இருந்தால் அதனை சரி செய்யும் பணியை கண்காணிக்க உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!