Udayanidhi Stalin : உதயநிதி அமைச்சராவது ஒட்டுமொத்த தமிழர்களின் விருப்பம்... அன்பில் மகேஷ் மீண்டும் அதகளம்.!

Published : Dec 15, 2021, 08:30 PM IST
Udayanidhi Stalin : உதயநிதி அமைச்சராவது ஒட்டுமொத்த தமிழர்களின் விருப்பம்... அன்பில் மகேஷ் மீண்டும் அதகளம்.!

சுருக்கம்

உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்பது பற்றி இரண்டாவது முறையாக அன்பில் மகேஷ் பேசியுள்ளார். காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஒருவர், உதயநிதியை துணை முதல்வராக ஆக்க வேண்டும் என்று ஒரு படி மேலே பேசியிருந்தார்.

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என்பது அமைச்சர்கள் மட்டுமல்ல; ஒட்டுமொத்த தமிழர்களின் விருப்பம் என்று தமிழக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீண்டும் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த உடனே, உதயநிதி ஸ்டாலின் அமைச்சரவையில் இடம் பிடிப்பாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், அவர் அமைச்சரவையில் இடம் பெறவில்லை. என்றாலும், அமைச்சர்கள் எல்லோரும் உதயநிதிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அளிக்கும் அதே மரியாதையை அளித்துவருகிறார்கள். எப்படியும் உதயநிதி முதல்வர் ஸ்டாலின் அமைச்சராக்கிவிடுவார் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.

இந்நிலையில், உதயநிதி பிறந்த நாளில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், “234 தொகுதிகளும் பயன்படும் வகையில் உதயநிதி ஸ்டாலின் மாறவேண்டும். நான் மட்டுமல்ல ஒட்டுமொத்த மக்களும், குறிப்பாக சேப்பாக்கம் தொகுதி மக்கள் நினைப்பது, எங்களுக்கு மட்டும் இவ்வளவு செய்யும்போது, அவர் உயரிய பதவிக்கு சென்றால் ஒட்டுமொத்த தமிழகத்திற்கே பயனளிக்கும் என்ற எண்ணம் உள்ளது. உதயநிதி அடுத்தகட்டமாக அமைச்சராக வேண்டும்” என்று தெரிவித்திருந்தார். 

உதயநிதியை அமைச்சராக்கும் வகையில், இதுபோன்று பேச்சுகள் திமுகவில் எழுந்ததாக கூறப்பட்டன. மேலும் கிச்சன் கேபினெட்டின் ஆசையை அமைச்சர் அன்பில் மகேஷ் மூலம் வெளிப்படுத்துவதாகவும் தகவல்கள் வெளியாயின. இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என்பதை அமைச்சர் அன்பில் மகேஷ் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார்.  இதுதொடர்பாக அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், “உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என்பது அமைச்சர்கள் மட்டுமல்ல; ஒட்டுமொத்த தமிழர்களின் விருப்பமாக உள்ளது. இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் முடிவு எடுப்பார்.” என்று தெரிவித்துள்ளார்.

உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்பது பற்றி இரண்டாவது முறையாக அன்பில் மகேஷ் பேசியுள்ளார். காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஒருவர், உதயநிதியை துணை முதல்வராக ஆக்க வேண்டும் என்று ஒரு படி மேலே பேசியிருந்தார். தொடர்ந்து இதுபோன்ற பேச்சுகளால் உதயநிதி ஸ்டாலின் விரைவில் அமைச்சராவார் என்றும் திமுகவில் பேசப்படுகிறது. அன்பில் மகேஷ் பேசுவது அதன் வெள்ளோட்டம்தான் என்றும் கூறப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

மிரட்டலுக்கு அடிபணிய மாட்டேன்.. பிரதமரை வறுத்தெடுத்த ஸ்டாலின்.. இபிஎஸ் மீதும் சரமாரி அட்டாக்!
ஒபிஎஸ்ஸின் ஒரே நம்பிக்கையும் போச்சு.. விஜய்யுடன் கை கோர்த்த அதிமுக முன்னாள் அமைச்சர்!