மோடி யாரை எல்லாம் ஓரம்கட்டிவிட்டு இந்த இடத்துக்கு வந்தார் என்று சொல்லவா? பிரதமருக்கு பதிலடி கொடுத்த உதயநிதி.!

By vinoth kumarFirst Published Mar 31, 2021, 6:38 PM IST
Highlights

பிரதமர் மோடியை பார்த்து கும்பிடு போட நான் ஒன்னும் பழனிசாமி இல்லை.. நான் கலைஞரின் பேரன் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 
 

பிரதமர் மோடியை பார்த்து கும்பிடு போட நான் ஒன்னும் பழனிசாமி இல்லை.. நான் கலைஞரின் பேரன் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 

சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. நேற்று பிரதமர் மோடி தமிழகம் வந்து பிரச்சாரம் செய்தார். அப்போது, திமுக பட்டத்து இளவரசருக்காக அக்கட்சியில் முக்கிய தலைவர்கள் ஓரம் கட்டப்பட்டுள்ளனர். திமுக இளவரசர் உதயநிதி, மூத்த தலைவர்களை ஓரம்கட்டிவிட்டி நடுநாயகமாக இருக்கிறார்கள். உதயநிதிக்காக கட்சியில் இருக்கும் மூத்த தலைவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. உதயநிதி, திண்டுக்கல் லியோனி ஆகியோர் பெண்களை இழிவாக பேசுகின்றனர். திமுக,காங்கிரசுக்கு குடும்பம் தான் முக்கியம். அவர்களுக்கு வாரிசு அரசியல்தான் முக்கியம். குடும்பத்தை முன்னேற்றுவதுதான் இவர்களின் நோக்கம், என்று பிரதமர் மோடி உதயநிதியை விமர்சித்து பேசினார்.

இந்நிலையில், பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவிநாசி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அப்போது, மோடி என் மீது செம கோபத்தில் இருக்கிறார். நான் குறுக்கு வழியில் வந்தவன் என்று கூறுகிறார். நானா குறுக்கு வழியில் வந்தவன். மோடி அவர்களே உங்களை பார்த்து நான் பயப்பட மாட்டேன். உங்களை பார்த்து பயப்பட, கும்பிடு போட நான் ஒன்னும் எடப்பாடி பழனிச்சாமி இல்லை. நான் உதயநிதி ஸ்டாலின். நான் கலைஞரின் பேரன். 

குஜராத் முதல்வராக இருந்து குறுக்கு வழியில் பிரதமர் ஆனது யார்? மோடி யாரை எல்லாம் ஓரம்கட்டினார் என்று லிஸ்ட் போடவா? பாஜகவில் அத்வானி என்று ஒருத்தர் இருந்தார். ரதயாத்திரை எல்லாம் சென்றார். அத்வானி இப்போது எங்கே போனார்.. யஷ்வந்த் சின்காவை டார்ச்சர் செய்து அனுப்பிவிட்டார். வெங்கய்யா நாயுடு எங்கே போனார். இவர்களை எல்லாம் நீங்கள்தான் ஓரம்கட்டியது.  மேலும், இந்திய வரலாற்றிலேயே இதுவரை ஒரு பத்திரிக்கை பேட்டி கூட அளிக்காத ஒரே பிரதமர் மோடிதான். உங்களால் முடிந்தால் எங்கள் மக்களை வந்து சந்தியுங்கள் அல்லது 10 பத்திரிக்கையாளர்களையாவது சந்தித்து அவர்கள் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்” என சவால் விடுக்கும் வகையில் பேசியுள்ளார்.

click me!