வாய்கிழிய திமுக கோட்டையின்னு சொன்னா மட்டும் போதுமா? இதுவரை என்ன செஞ்சி கிழிச்சிங்க.. கொதித்த குஷ்பு..!

Published : Mar 31, 2021, 06:26 PM IST
வாய்கிழிய திமுக கோட்டையின்னு சொன்னா மட்டும் போதுமா? இதுவரை என்ன செஞ்சி கிழிச்சிங்க.. கொதித்த குஷ்பு..!

சுருக்கம்

ஆயிரம் விளக்கு தொகுதி திமுகவின் கோட்டை என்று சொல்லக்கூடிய திமுகவினர் தங்களது ஆட்சி காலத்தில் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை கூட தீர்க்காமல் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? என குஷ்பு காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆயிரம் விளக்கு தொகுதி திமுகவின் கோட்டை என்று சொல்லக்கூடிய திமுகவினர் தங்களது ஆட்சி காலத்தில் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை கூட தீர்க்காமல் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? என குஷ்பு காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் எழிலனை எதிர்த்து பாஜக சார்பில் குஷ்பு போட்டியிடுகிறார். நாள்தோறும் தவறாமல் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.  இன்று கிரியாப்பா சாலை, தாமஸ் சாலை, குடிசை மாற்று வாரியம்  பகுதிகளுக்கு வீதி வீதியாக சென்று துண்டு பிரசுரங்கள் விநியோகித்து வாக்கு சேகரித்தார்.

இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த குஷ்பு;- ஆயிரம் விளக்கு பகுதியில் குடிநீர் பிரச்சனை, பாதாள சாக்கடை பிரச்சனை, வீட்டுமனை பட்டா இல்லாதது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் இருப்பதாக பொதுமக்கள் தன்னிடம் தெரிவித்ததாகவும், பெரும்பாலான பகுதிகளில் சாலைகள் சேதமடைந்து இருப்பதாக புகார் தெரிவித்துள்ளனர். 

ஒரு மாணவி சொன்னார் நான் முதல் முறையாக வாக்களிக்க உள்ளேன். உங்களுக்கு வாக்கு அளிப்பேன் நான் கேட்பது ஒன்றே ஒன்று தான் இங்கு மூடி கிடக்கும் நூலத்தை திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதேபோல், கண் தெரியாத 10 வயது மாற்றுத்திறனாளி குழந்தை, சாலை இல்லாததால் கஷ்டமாக இருக்கிறது என என்னிடம் கூறினார். சாலை போடுவது அவ்வளவு கஷ்டம் இல்லை. நானும் இரு குழந்தைகளுக்குத் தாய்தான். குழந்தைகள் கேட்கும்போது மனதுக்குக் கஷ்டமாக இருக்கிறது. 

ஆயிரம் விளக்கு தொகுதி திமுகவின் கோட்டை என்று சொல்லக்கூடிய திமுகவினர் தங்களது ஆட்சி காலத்தில் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை கூட தீர்க்காமல் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? என கேள்வி எழுப்பினார். மக்களின் அன்றாட தேவைகளை செய்து கொடுக்க முடியாத நீங்கள் திமுக கோட்டை என்று எப்படி சொல்வீர்கள் என்றார்.  4 ஆண்டுகளாக கு.க.செல்வத்தை வேலை செய்ய விடாததால்தான் வெளியே வந்துள்ளார்.

அதிமுக, பாஜகவை எதிரி எனக்கூறும் திமுக மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மக்களுக்கு சென்றடைவதை திமுகவினர் தடுப்பதாக சாடினார். அதிமுகவிலிருந்து இங்கு எம்எல்ஏவாக இருந்த வளர்மதி நல்ல திட்டங்களைக் கொடுத்தார். பெண்களை அவமதிப்பதும், இழிவாகப் பேசுவதும் திமுகவுக்குப் புதிதல்ல. அதை மாற்றவே முடியாது. திமுகவிலிருந்து வந்தவள் நான். மரியாதை இல்லாததால்தான் வெளியில் வந்தேன் என குஷ்பு கூறியுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

நாளை தவெக வில் சேருகிறார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்..! டெல்டாவை தட்டி தூக்க பக்கா ஸ்கெட்ச்
ஜி.கே.மணி மனுசனே இல்ல.. அப்பாவையும், என்னையும் பிரிச்சிட்டாரு.. போட்டுத் தாக்கிய அன்புமணி!