செங்கல்பட்டு இளம்பெண் தற்கொலை.. உண்மைன்னா திமுக நிர்வாகியை கைது செய்ய வலியுறுத்துவோம்..உதயநிதியின் ட்விஸ்ட்!

By Asianet TamilFirst Published Jul 4, 2020, 8:37 PM IST
Highlights

 மற்றவர்களுக்கு இரு நியாயம், தங்களது கட்சியை சேர்ந்தவர்களுக்கு ஒரு நியாயமா எனவும் அவர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள். #justiceforsasikala என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி அதிமுக, பாஜகவினர் சமூக ஊடங்களில்  திமுகவை விமர்சித்துவருகிறார்கள்.
 

செங்கல்பட்டில் இளம்பெண் தற்கொலை விவகாரத்தில் திமுக நிர்வாகி குற்றம் செய்திருந்தால் அவரை கைது செய்ய திமுக இளைஞரணி வலியுறுத்தும் என்று அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்  தெரிவித்துள்ளார். 

செங்கல்பட்டில் இளம்பெண் தற்கொலையில் திமுக இளைஞரணி நிர்வாகிக்கு தொடர்பு இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அருகே நைனார் குப்பத்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து துன்புறுத்தியதுடன் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டதாக திமுக இளைஞரணி செயலாளர் தேவேந்திரன் மீது புகார் கூறப்பட்டுள்ளது. அந்த இளம்பெண்ணை ஆபாசமாக வீடியோ எடுத்து, பாலியல் தொல்லைக்கு இணங்காததாதே இதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.


இந்நிலையில், மற்ற சம்பவங்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்து  அறிக்கை மேம் அறிக்கை வெளியிடும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் இந்த விவகாரத்தில் வாய் திறக்கவில்லை என்று சமூக ஊடங்களில் விமர்சித்துவருகின்றனர். மற்றவர்களுக்கு இரு நியாயம், தங்களது கட்சியை சேர்ந்தவர்களுக்கு ஒரு நியாயமா எனவும் அவர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள். #justiceforsasikala என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி அதிமுக, பாஜகவினர் சமூக ஊடங்களில்  திமுகவை விமர்சித்துவருகிறார்கள்.


இந்நிலையில் இதுதொடர்பாக திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில் பதில் கூறியுள்ளார். அந்தப் பதிவில்,  “செங்கல்பட்டு நைனார்குப்பம் சசிகலாவை தற்கொலைக்கு தூண்டியதாக பதியப்பட்ட வழக்கில் இளைஞரணி நிர்வாகி ஒருவரும் சம்பந்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. முதலில் தீர விசாரிக்கவேண்டும். அவர் குற்றம் செய்திருந்தால் அவரை கைது செய்யும் நடவடிக்கையை திமுக இளைஞரணி வலியுறுத்தும்” என்று பதிவில் உதயநிதி குறிப்பிட்டுள்ளார்.

click me!