உதய்ப்பூர் படுகொலை-சனாதனிகள் விரித்த சதிவலை.. திருமாவளவன் பகீர்.

Published : Jun 30, 2022, 12:25 PM IST
உதய்ப்பூர் படுகொலை-சனாதனிகள் விரித்த சதிவலை.. திருமாவளவன் பகீர்.

சுருக்கம்

உதய்ப்பூர் படுகொலை-சனாதனிகள் விரித்த சதிவலை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் .திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:-

உதய்ப்பூர் படுகொலை-சனாதனிகள் விரித்த சதிவலை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் .திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:-

உதய்ப்பூர் கண்ணையாலால் படுகொலை எதிர்வினை பயங்கரவாதக்  கொடுங்குற்றமாகும். அதிதீவிர சனாதன பயங்கரவாதிகளின் வெறுப்பு அரசியலில் சிக்கிய ஒரு அப்பாவியை மதத்தின் பெயரால் இவ்வாறு படுகொலை செயதிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
இஸ்லாத்தின் பெயரால் நடக்கும் இதுபோன்ற கொடூரங்களை இஸ்லாமியச் சமூகம் ஒருபோதும் ஏற்காது என்பதை அறிவோம். 

இதையும் படியுங்கள்: திடீர் விசிட் சென்ற முதலமைச்சர்.. பணியில் இல்லாமல் இருந்த அதிகாரி சஸ்பெண்ட்.. அடுத்து நடந்தது என்ன..?

நுபுர் சர்மாவும் சனாதன பயங்கரவாத அரசியலின் விளைச்சல் தான்.எனவே அழித்தொழிக்கப்பட வேண்டியது நபர்களல்ல; வெறுப்பை விதைக்கும் பயங்கரவாத கோட்பாடே ஆகும். நபிகள் நாயகத்தை இழிவுப்படுத்துவது என்பது இஸ்லாமியச் சமூகத்தைச் சீண்டி வம்பிழுக்கும் திட்டமிட்ட சதிச் செயலே ஆகும்.

இஸ்லாமியர்களை வீதிக்கு இழுப்பதன் மூலம் எதிர்வினையாக இந்துக்களை ஒருங்கே திரட்டுவது தான் அவர்களின் நோக்கமாகும். இந்தியர்களை இந்துக்கள் × இஸ்லாமியர் என பிளவுப்படுத்துவதும் அதன்வழி இந்துப்  பெரும்பான்மைவாதத்தை நிலைநாட்டுவதும் தான் சனாதனிகளின் சதி திட்டமாகும்.

இதையும் படியுங்கள்: மீண்டும் திமுகவில் இணைகிறாரா பாஜக முக்கிய நிர்வாகி சரவணன்..! அவரே சொன்ன பரபரப்பு தகவல்

இதனைப் புரிந்துகொள்ளத் தவறினால் அறிந்தோ அறியாமலோ அவர்களின் சதி நோக்கங்களுக்குத் துணை போவதாக அமையும். உதய்ப்பூர் படுகொலை சனாதனிகள் விரித்த சதிவலையில் சிக்கிய கொடுஞ்செயலே ஆகும். இது இஸ்லாமியரோடு சனநாயக சக்திகள் அணிதிரளுவதைத் தடுத்திட வழிவகுக்கும்.

எனவே, இதனைப் புரிந்து கொள்வதுடன், இன்றைய சூழலில் பாஜக-வையும் சங்பரிவார்களையும் தனிமைப்படுத்த வேண்டியது தவிர்க்கமுடியாத ஒரு  தேவையாக உள்ளது என்பதை இந்திய இஸ்லாமியச் சமூகம் தெளிவாக உணர்ந்து கொண்டு மிகவும் கவனமாக செயல்பட வேண்டுமென்பதையும் விடுதலைச்சிறுத்தைகள் சுட்டிக் காட்ட விரும்புகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
 

PREV
click me!

Recommended Stories

தேர்தல் ஆணையத்தை ஏமாற்றிய அன்புமணி..! டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு..! ஆதாரத்தை காட்டி பாமக அருள்..!
மரத்துல ஏறாதீங்க... புதுச்சேரிக்கு தமிழகத்தை சேர்ந்த யாரும் உள்ளே வரக்கூடாது..! தவெக தலைமை உத்தரவு..!