மீண்டும் திமுகவில் இணைகிறாரா பாஜக முக்கிய நிர்வாகி சரவணன்..! அவரே சொன்ன பரபரப்பு தகவல்

By Ajmal KhanFirst Published Jun 30, 2022, 11:41 AM IST
Highlights

திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி முன்னிலையில் பாஜக மதுரை மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் திமுகவில் இணைவதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தான் எந்த கட்சிக்கும் செல்லவில்லையென சரவணன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

திமுகவில் இணைந்த டாக்டர் சரவணன்

மதுரையில் பிரபல மருத்துவர் டாக்டர் சரவணன், இவர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது கொன்ற பற்றின் காரணமாக மதிமுகவில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்தார். இதனையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னை இணைத்துக்கொண்டு தீவிரமாக செயல்பட்டு வந்தார். அப்போது ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது தேர்தல் ஆணையத்தில் வழங்கப்பட்ட விண்ணப்ப படிவத்தில் ஜெயலலிதா கைரேகையில் உயிரோட்டம் இல்லையென நீதிமன்றத்தல் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து அரவங்குறிச்சி மற்றம் திருப்பரங்குன்றம் தேர்தல் முடிவு செல்லாது என நீதிமன்றம் அறிவித்தது. தொடர்ந்து நடைபெற்ற மதுரை திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று திமுக சட்டமன்ற உறுப்பினராக டாக்டர் சரவணன் தேர்வானர். 

முன்னாள் அமைச்சரிடம் மன்னிப்பு கேட்டாரா இபிஎஸ்...? புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ச்சி அடையும் தொண்டர்கள்

பாஜகவில் இணைந்த சரவணன்

இந்தநிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட மீண்டும் போட்டிய திமுக வாய்ப்பு வழங்கும் என எதிர்பார்த்தார். ஆனால் அந்த தொகுது கூட்டணி கட்சியான கம்யூனிஸ்ட்க்கு திமுக ஒதுக்கியது. இதனால் அதிருப்தி அடைந்த சரவணன் பாஜகவில் இணைந்து போட்டியிட வாய்ப்பையும் பெற்றார். ஆனால் இந்த தேர்தலில் கம்யூனிஸ்ட் வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். இதனையடுத்து டாக்டர் சரவணன் மதுரை நகர் மாவட்ட தலைவரானார், தொடர்ந்து கட்சி பணிகளிலும் தீவிரம் காட்டியவர், பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மதுரையில் பிரம்மாண்டமான வரவேற்பு கொடுத்தும் பொதுக்கூட்டம் நடத்தியும் அசத்தினார். 

அதிமுக பொதுக்குழுவிற்கு தடை விதியுங்கள்... அரசுக்கு புகழேந்தி பரபரப்பு கடிதம்!!

மீண்டும் திமுகவில் சரவணன்?

இந்தநிலையில் பாஜக மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக டாக்டர் சரவணன் மீண்டும் திமுகவில் இணையவுள்ளதாக கடந்த ஒரு மாதமாகவே சமூக வலை தளத்தில் தகல் பரவியது. குறிப்பாக திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி தலைமையில் இணையவுள்ளதாக கூறப்பட்டது. இந்த தகவல் வேகமாக பரவிய நிலையில் டாக்டர் சரவணனிடம் ஏராளமானோர் இது தொடர்பாக விசாரிக்க தொடங்கினர். இதனால் அதிர்ச்சி அடைந்த சரவணன் நேற்று திடீரென அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் நான் பாஜக கட்சியில் மதுரை மாவட்ட தலைவராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். தமிழகத்தில் எங்களது மாநில தலைவர் அண்ணாமலை தலைமையிலும் மதுரையில் எனது தலைமையிலும் பாஜக அபார வளர்ச்சி பெற்று வருகிறது. இந்தநிலையில் யாரோ வீண் புரளியை ஏற்படுத்திவருவாதக அந்த அறிக்கையில் கூறியுள்ளார். எனவே டாக்கர் சரவணன் திமுக செல்ல இருப்பதாக வெளியான தகவலுக்கு தற்போது முற்றுப்புள்ள வைக்கப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்

இபிஎஸ் பிடிவாதத்தால் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடியாத அதிமுக..? அதிர்ச்சியில் நிர்வாகிகள்

 

click me!