இபிஎஸ் பிடிவாதத்தால் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடியாத அதிமுக..? அதிர்ச்சியில் நிர்வாகிகள்

By Ajmal Khan  |  First Published Jun 30, 2022, 10:37 AM IST

அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், உள்ளாட்சி தேர்தலில் அதிமுக போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் தொண்டர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
 


உள்ளாட்சி தேர்தல் அதிமுக நிலை என்ன?

தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஜூலை 9ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியிட்டது. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 2 மாவட்ட கவுன்சிலர், 20 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், 40 ஊராட்சி தலைவர்கள், 436 கிராம ஊராட்சி உறுப்பினர், நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 2 மாநகராட்சி கவுன்சிலர், 2 நகராட்சி கவுன்சிலர், 8 பேரூராட்சி கவுன்சிலர் உள்ளிட்ட 510 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டது.  இந்தப் பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய கடந்த 27 ஆம் தேதி கடைசிநாள் என கூறப்பட்டது. 30 ஆம் தேதியான இன்று  மாலை 5 மணிக்குள் வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசிநாளாகும். இந்தநிலையில் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு சின்னங்களை ஒதுக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

Tap to resize

Latest Videos

அதிமுக பொதுக்குழுவிற்கு தடை விதியுங்கள்... அரசுக்கு புகழேந்தி பரபரப்பு கடிதம்!!

 

 

விண்ணப்பத்தில் கையெழுத்திட மறுக்கும் இபிஎஸ்

இந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அதிமுகவினர் அதிக ஆர்வம் காட்டிய நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள உட்கட்சி பிரச்சனை காரணமாக தேர்தலில் அதிமுக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அப்படியே போட்டியிட்டாலும் இரட்டை இலை சின்னம் இல்லாமல் தனி சின்னத்தில் போட்டியிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தற்போது அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை பிரச்சனையால் தேர்தல் ஆணையத்திற்கு வழங்க வேண்டிய விண்ணப்பத்தில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் கையெழுத்திடாமல் உள்ளனர். இந்தநிலையில் தான் நேற்று ஓபிஎஸ், இபிஎஸ்க்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில் அதிமுகவினர் தேர்தலில் போட்டியிடுவதற்கான ஏ பார்ம் மற்றும் பி பார்ம் களில் கெயெழுத்திட்டு வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

உள்ளாட்சி இடைத்தேர்தல்.. கையெழுத்து போட நான் ரெடி.. நீங்க ரெடியா? ஓபிஎஸ் கடிதத்தை நிராகரித்த இபிஎஸ்..!

தேர்தலை புறக்கணிக்க திட்டம்?

ஆனால் இதனை இபிஎஸ் தரப்பு நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே வேட்பு மனுவை திரும்ப பெற இன்று கடைசி நாளாக உள்ளதால், அதிமுகவினர் மாவட்ட கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் உள்ளிட்ட பதவிகளுக்கு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அதிமுக சார்பாக தேர்தலை புறக்கணிக்கப்பட்டாலும் அதிமுக தொண்டர்கள் தனி சின்னத்தில் போட்டிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்

முன்னாள் அமைச்சரிடம் மன்னிப்பு கேட்டாரா இபிஎஸ்...? புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ச்சி அடையும் தொண்டர்கள்

click me!