தலித்களுக்கு ஆதரவாக நின்ற இசுலாமியர்கள் மீது ஊபா சட்டம்..!! போராட்டத்திற்கு அணியமாகும் விடுதலை சிறுத்தைகள்..!!

By Ezhilarasan BabuFirst Published Oct 9, 2020, 11:00 AM IST
Highlights

தலித்களோடு இசுலாமியர்கள் இணைந்து விடக்கூடாது என்பதற்கான தடுப்பு நடவடிக்கைகள் தான் இந்த கைது நடவடிக்கைகள். 
பாஜக அரசு ஊபா சட்டத்தை திருத்தி அமல்படுத்தியதிலிருந்து தலித்களும் இசுலாமியர்களுமே வேட்டையாடப்பட்டு வருகின்றனர்.

தலித்களுக்கு ஆதரவாக நின்ற இசுலாமியர்கள் மீது ஊபா சட்டத்தை பாய்ச்சி கைது செய்யப்படுவதையும் அவர்களில் விடுதலைக்காகவும் போராடுவோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்: 

உபி முதல்வர் யோகி முழுமையான சர்வதிகாரியாக மாறி வருகிறார் என்பது உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது.மணிஷா வால்மீகி பாஜக ரவுடி கும்பலால் கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட கொடூரம் இந்திய ஒன்றியமே அதிர்ந்துள்ளது.காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவர்கள் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி போனபோதே தடுத்து நிறுத்தப்பட்டார்கள். திரு. ராகுல் அவர்கள் கீழே தள்ளப்பட்டு அச்சுறுத்தப்பட்டார் என்பதை நாடே கவனித்தது. இதற்கிடையே முதல்வர் யோகி ஆதித்யநாத் “ இந்த சம்பவத்தில் வெளிநாட்டு சதி இருக்கிறது” என்று அறிக்கை கொடுத்தார். அந்த அறிக்கையை உறுதிப்படுத்த உ.பி அரசு சில தலைவர்களை கைது செய்திருக்கிறது. அவர்கள் இசுலாமியர்கள். தாழ்த்தப்பட்ட மக்கள் பாதிப்புக்குள்ளாவதை கண்டித்து போராட வரும் இசுலாமிய தலைவர்களை அச்சுறுத்தும் வகையில் அவர்களை ஊபா சட்டத்தில் கைது செய்திருப்பது தான் கொடுமையிலும் கொடுமை. 

கேம்பஸ் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா தேசிய பொருளாளர் அடிக்கூர் ரகுமான், டெல்லி மாநில பொது செயலாளர் மசூத் அஹமத், டெல்லியில் பணியாற்றும் மூத்த கேரள பத்திரிகையாளர் சித்திக் காப்பான், இவர்களுக்கு வாகனம் ஓட்டிய ஓட்டுநர் ஆலம் இவர்கள் மீது தான் ஊபா சட்டத்தை பாய்ச்சியிருக்கிறது உபி பாஜக போலீசு. இவர்கள் செய்த குற்றம் என்ன? பாதிக்கப்பட்ட மணிஷா வால்மீகி குடும்பத்தை சந்தித்து ஆறுதல் சொல்ல போனார்கள். ஹத்ராஸ் போவதற்கு முன்னுள்ள ஓர் சுங்கச்சாவடியில் தடுக்கப்பட்டு கைது செய்யப்படுகின்றனர். இவர்களோடு கேரள பத்திரிகையாளர்கள் சங்கத்தின் டெல்லி கிளை தலைவர் சித்திக் காப்பான் செய்தி சேகரிக்க சென்றார். இவர் மீதும் தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு வண்டி ஓட்டியதற்காக ஓட்டுநர் மீதும் தேசதுரோக வழக்கு பதிவு செய்து சிறைப்படுத்தி உள்ளது. 

மணிஷா வால்மீகியை படுகொலை செய்தவர்களை பாதுகாக்கத்தான் பாஜக அரசு கவனம் செலுத்துகிறதே தவிர, நீதி பெற்றுத்தருவதில் கவனம் செலுத்தவில்லை என்பதை தேசமே பார்த்துக்கொண்டு தான் இருக்கிறது.தலித்களோடு இசுலாமியர்கள் இணைந்து விடக்கூடாது என்பதற்கான தடுப்பு நடவடிக்கைகள் தான் இந்த கைது நடவடிக்கைகள். பாஜக அரசு ஊபா சட்டத்தை திருத்தி அமல்படுத்தியதிலிருந்து தலித்களும் இசுலாமியர்களுமே வேட்டையாடப்பட்டு வருகின்றனர். இதை தடுத்தாக வேண்டும்.கைது செய்யப்பட்டுள்ள அடிக்கூர் ரகுமான் மனித உரிமைகளுக்காக போராடி வருபவர். தலித் இசுலாமியர் ஒற்றுமைக்காக பாடாற்றிவருபவர். அவர்மீது இந்த தேச துரோக வழக்கையும் ஊபா சட்டத்தையும் பாய்ச்சியருப்பது கடும் கண்டனத்துக்குரியது.எல்லோரும் தேச துரோக கும்பலான பாஜக ஆர்எஸ்எஸ் ரவுடிகளிடமிருந்து இந்த தேசத்தை பாதுகாக்க அணியமாகவேண்டும். இவர்களது விடுதலைக்கு போராடுவோம். என அதில் கூறப்பட்டுள்ளது. 

 

click me!