தமிழ் மொழியை தகுதிப்பட்டியலில் சேர்த்தமத்திய அரசு..! முதல்வர் பழனிச்சாமி எழுதிய கடித்ததிற்கு கிடைத்த வெற்றி..!

By T BalamurukanFirst Published Oct 9, 2020, 10:38 AM IST
Highlights

மத்திய தொல்லியல் பட்டயப்படிப்புக்கான தகுதிப்பட்டியலில் செம்மொழியான தமிழ் மொழி சேர்க்கப்பட்டுள்ளது தமிழர்களுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 
 

மத்திய தொல்லியல் பட்டயப்படிப்புக்கான தகுதிப்பட்டியலில் செம்மொழியான தமிழ் மொழி சேர்க்கப்பட்டுள்ளது தமிழர்களுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 
 


மத்திய அரசின் தொல்லியல் துறை பட்டப்படிப்புக்கான அறிவிப்பில் கல்வி தகுதியாக சமஸ்கிருதம், பாலி, பிராகிருதம், அரபி மொழிகள் இடம்பெற்றிருந்தது.இந்த நிலையில் தமிழ் மொழி இடம்பெறாதது பல்வேறு அரசியல் கட்சிகள் தமிழ் ஆர்வலர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து கண்டன அறிக்கையை திமுக தலைவரும் எதிர்கட்ட்சி தலைவருமான முக ஸ்டாலின் வெளியிட்டிருந்தார். 
 
இதனைத்தொடர்ந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, செம்மொழியும் முதல் மொழியுமான தமிழ் புறக்கணிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி மத்திய அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். இந்நிலையில் இப்போது மத்திய தொல்லியல் பட்டயப்படிப்புக்கான தகுதிப்பட்டியலில் செம்மொழியான தமிழ் மொழி சேர்த்துள்ளது. தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதாக எதிர்ப்பு எழுந்த நிலையில் தற்போது தமிழ் மொழியை சேர்ந்து இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது மத்திய அரசு. 

click me!