பாஜகவுக்கு இரு அடிமைகள்... ஒன்னு இங்க இருக்கு... இன்னொன்னு..? கிழித்து தொங்கவிட்ட ஜோதிமணி.!

By Asianet TamilFirst Published Oct 3, 2021, 8:33 PM IST
Highlights

தமிழகத்தில் அதிமுக எப்படி பாஜகவுக்கு அடிமையாக இருந்ததோ, அதுபோல புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி உள்ளது என்று கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி விமர்சனம் செய்துள்ளார்.
 

கரூர் நாடாளுமன்ற எம்.பி. ஜோதிமணி காரைக்காலுக்கு வந்திருந்தார். புதுச்சேரியில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டட்தில் பங்கேற்றார். பின்னர்  அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “புதுச்சேரியில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் நகராட்சி முதல் கிராமப் பஞ்சாயத்து வரை எல்லாப் பதவிகளுக்கும் காங்கிரஸ் கட்சி போட்டியிடுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம். புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி நிலைப்பாடு குறித்து இங்குள்ள தலைவர்களே முடிவெடுப்பார்கள்.

புதுச்சேரியைப் பொறுத்தவரை காங்கிரஸ் கட்சிதான் இன்றும் முதன்மையான கட்சி. சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியடைந்தபோதிலும் காங்கிரஸ் கட்சி 29 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. தேர்தலில் வெற்றி பெற்றாலும், தோல்வியடைந்தாலும் காங்கிரஸ் கட்சி புதுச்சேரி மக்களுக்காகத் தொடர்ந்து பணியாற்றி வருகிறது. புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையில் ஆட்சி நடைபெற்றுவந்தாலும், தமிழகத்தில் அதிமுக எப்படி பாஜகவுக்கு அடிமையாக இருந்து, தேர்தலில் தோல்வியடைந்து, தற்போது கட்சியே கரையும் நிலைமையில் உள்ளது. 
அதுபோல துரதிர்ஷ்டவசமாக புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி பாஜகவுக்கு அடிமையாக உள்ளது. குறிப்பாக மாநிலங்களவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸை மிரட்டியோ அல்லது வற்புறுத்தியோ பாஜக அந்த இடத்தைப் பெற்றது. தற்போது புதுச்சேரியில் மக்கள் விரோத அரசு ஆட்சியில் உள்ளது. காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்திருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்காது என மக்கள் உணர தொடங்கிவிட்டனர்.  உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை மக்கள் வெற்றி பெறச் செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” என்று ஜோதிமணி தெரிவித்தார்.
 

click me!