மாநில அரசின் செயல்பாடுகளை மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.. திமுகவை எச்சரிக்கும் ஜி.கே வாசன்.

By Ezhilarasan BabuFirst Published Oct 3, 2021, 6:00 PM IST
Highlights

மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே நடத்தப்படும் கூட்டங்களில் மாநில அரசுகள் பங்கேற்பது அவசியம் என்ற அவர், அந்தவகையில் ஜிஎஸ்டி கூட்டத்தில் மாநில அரசு பங்கேற்க வேண்டியது மிக மிக அவசியம் என்றும், அரசு என்ன செய்கிறது என்பதை மக்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார். 

உச்சநீதிமன்ற கிளை சென்னைக்கு வரயிருப்பது சாமானியர்களுக்கும் எளிய முறையில் நீதி கிடைக்க ஏதுவாக இருக்கும் என்றும், அதனை வரவேற்கிறோம் என்றும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் தெரிவித்துள்ளார். மா.பொ.சி அவர்களின் 26வது நினைவு  நாளை ஒட்டி, சென்னை தி நகரில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த புகைப்படத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே வாசன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.பின்னர் செய்தியாளர்களை பேசிய அவர், உள்ளாட்சி தேர்தல் கோட்பாடுகளுக்கு உட்பட்டு முறையாக நடைபெற வேண்டும், வேட்புமனுத்தாக்கல் முதலே பல இடங்களில் பிரச்சனைகளும் முறைகேடுகளும் நடந்து வருகிறது, இதையெல்லாம் தமிழக தேர்தல் ஆணையம் கவனித்து தேர்தலை முறையாக நடத்த முயற்சிக்க வேண்டும் என்றார். 

மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே நடத்தப்படும் கூட்டங்களில் மாநில அரசுகள் பங்கேற்பது அவசியம் என்ற அவர், அந்தவகையில் ஜிஎஸ்டி கூட்டத்தில் மாநில அரசு பங்கேற்க வேண்டியது மிக மிக அவசியம் என்றும், அரசு என்ன செய்கிறது என்பதை மக்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார். அதேபோல் உச்சநீதிமன்றத்தில் கிளை சென்னைக்கு வர உள்ளது சாமானியார்களுக்கும் எளிய முறையில் நீதி  கிடைப்பதற்கு ஏதுவாக இருக்கும், அதனை வரவேற்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஜி.கே வாசனை தொடர்ந்து, மாபெசி உருவப்படத்திற்கு பாஜக மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அப்போது பேசிய அவர், மா.பொ.சி அவர்கள் தடம் பதிக்காத துறையே இல்லை என்றார். சுதந்திர போராட்ட வீரர்களுக்கான வா.உ சிதம்பரம் உள்ளிட்டோருக்கு கதை, திரைக்கதை வசனம் உள்ளிட்டவைகளை எழுதி தமிழ் சினிமாவின் அடையாளம் பதிக்க காரணமாக இருந்தவர். அவரது மகன் மா.பொ.சி செந்தில் பாஜகவின் முக்கிய பொறுப்பில் இருப்பது எங்களுக்கு பெருமை அளிக்கிறது என்றார்.

click me!