இரட்டை இலையை முடக்கிவிடுவேன்.. இப்படி மிரட்டாதீங்க ஓபிஎஸ்.! ரகசியத்தை உடைத்த அதிமுக பிரமுகர்

By Raghupati R  |  First Published Jun 19, 2022, 7:32 PM IST

AIADMK : ஒற்றை தலைமை என்பது தேவையில்லாதது என ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்துள்ளார். இருப்பினும் கட்சிக்குள் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கி இருப்பதால் அவர் கட்சியின் அடுத்த தலைவராக தேர்வு தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது.  


அதிமுக தலைமை பிரச்னை

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி,  உள்ளாட்சித் தேர்தலில் தோல்வி என அதிமுகவின் பலம் குறைந்து வருவதால்,  கட்சிக்கு ஒற்றை தலைமை தேவை என்று கோரிக்கை வலுத்துள்ளது.  ஆனால் ஒற்றை தலைமை என்பது தேவையில்லாதது என ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்துள்ளார்.   இருப்பினும் கட்சிக்குள் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கி இருப்பதால் அவர் கட்சியின் அடுத்த தலைவராக தேர்வு தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது.  

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க : "ஒற்றை தலைமை காலத்தின் கட்டாயம்.. ஓபிஎஸ் புரிஞ்சுக்கணும்" குண்டை தூக்கி போடும் ஓ.எஸ் மணியன்

இதனிடையே ஓபிஎஸ்-ஈபிஎஸ் இருவரும் தனித்தனியே தங்களது ஆதரவாளர்களுடன் தொடர்ந்து ஆலோசித்து வருகின்றனர்.  இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அதிமுக மாநில வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான நட்டர்ஜி. அப்போது பேசிய அவர், ‘ பாஜகவின் இரண்டாவது அணியாக ஓ. பி. எஸ் செயல்படுகிறார் ஓ. பன்னீர்செல்வம் சுயநலவாதியாக செயல்படுகிறார் என்று குற்றம்சாட்டினர்.

இரட்டை இலை முடக்கம்

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக இருக்க வேண்டும் என தொண்டர்கள் விரும்புகிறார்கள். ஆனால், பாஜகவின் இரண்டாவது அணியாக செயல்படக்கூடிய ஓபிஎஸ் கட்சி சின்னத்தை முடக்கி விடுவேன் என மிரட்டும் தொனியில் பேசுவது ஏற்புடையது அல்ல. ஓபிஎஸ்-க்கு பின்புறமாக சசிகலா இருக்கலாம் என அதிமுக மாநில வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் நட்டர்ஜி குற்றம்சாட்டினர்.

இதையும் படிங்க : 90 சதவீதம் ஓகே.. நீங்க முரண்டு பிடிக்காதீங்க ஓபிஎஸ்.! எடப்பாடிக்கு ஆதரவாக குதித்த ராஜன் செல்லப்பா

click me!