இரட்டை இலை மீட்பு...!அன்று 1989 இன்று 2017...! அடுத்து...

 
Published : Nov 23, 2017, 05:09 PM ISTUpdated : Sep 19, 2018, 01:29 AM IST
இரட்டை இலை மீட்பு...!அன்று 1989 இன்று 2017...! அடுத்து...

சுருக்கம்

TWO LEaf owned by edapadi team

அதிமுக சின்னமான  இரட்டை இலை தற்போது EPS OPS அணிக்கே சொந்தம் என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளதால் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்

இது போன்ற ஒரு சம்பவம் புதிதல்ல. இதற்கு முன்னதாகவே 1987-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அதிமுக கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆர். மறைந்ததும், ஜெயலலிதா தலைமையில் ஒரு அணியாகவும், எம்.ஜி.ஆர் மனைவி ஜானகி தலைமையில் மற்றொரு அணியாகவும் அ.தி.மு.க பிளவை எதிர்கொண்டது. 

எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின், முதல்வராகப் பொறுப்பேற்ற ஜானகி தலைமையிலான அரசு, 1988-ம் ஆண்டு, சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியது. இந்த வாக்கெடுப்பின்போது, ஜெயலலிதா ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கும், ஜானகி ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கும் இடையே கடும் அமளி ஏற்பட்டது. என்றாலும் ஜானகி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் ஜானகி அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்த போது சட்டசபையில் ஏற்பட்ட மோதல்களைக் காரணம் காட்டி, அவரது அரசு கலைக்கப்பட்டது.

இதையடுத்து, கடந்த 1989-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. அ.தி.மு.க ஜெயலலிதா அணி மற்றும் ஜானகி அணி என இரு அணிகளாக அந்தத் தேர்தலில் களம் இறங்கியது. ஜெயலலிதா அணிக்கு சேவல் சின்னமும், ஜானகி அணிக்கு இரட்டை புறா சின்னமும் ஒதுக்கப்பட்டன.

1989-ம் ஆண்டு தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க 27 இடங்களில் வெற்றிபெற்றது. படுதோல்வி அடைந்த ஜானகி, கட்சியை ஜெயலலிதாவிடமே ஒப்படைக்க ஒப்புக்கொண்டு சமரசம் செய்து கொண்டார். இதனால், அ.தி.மு.க-வுக்கு தலைமை ஏற்ற ஜெயலலிதா, இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையத்திடம் இருந்து மீண்டும் பெற்றார்.

அதே நிலை தற்போது ஜெயலலிதா இறந்த பின் மீண்டும் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டு உள்ளது

1989 இல்,தற்போது ஜெயிலில் உள்ள சசிகலா மற்றும் அவருடைய கணவர் நடராஜன்,மற்றும் தமிழக  காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுகரசர் உள்ளிட்டோர் மிக முக்கிய பங்கு வகித்தன.

முடக்கப்பட்டிருந்த இரட்டை இலை சின்னத்தை பெற்றபின் புகழின் உச்சியில் இருந்த ஜெயலலிதா, ஜானகி அம்மாளுக்கு புரட்சி தலைவி நன்றி தெரிவித்து இருந்தார்.

28 ஆண்டுகளுக்கு பின், இன்று .......2017 நவம்பர் 23

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு இரண்டு அணிகளாக பிரிந்த தினகரன் அணி மற்றும் எடப்பாடி அணி, உட்கட்சி பூசல் காரணமாக ஒரே சின்னத்திற்கு உரிமை கோரியதால், கடந்த மார்ச் மாதம் 22  ஆம்  தேதி இரட்டை இலை சின்னத்தை முடக்கியது தேர்தல் ஆணையம்

பின்னர் நீண்ட இழுபறிக்குபின் இன்று இரண்டாவது முறையாக கட்சி சின்னம் எடப்பாடி அணிக்கு  சொந்தம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இரட்டை இலை சின்னத்தை பொறுத்தவரை  இதுபோன்று இரண்டு முறை சின்னம் முடக்கப்பட்டு  மீட்டெடுக்கபட்டுள்ளதால், மீண்டும் சில ஆண்டுகள் கழித்தும் இதே நிலை ஏற்படலாம் என  பொதுவாகவே நினைக்க  வைக்கிறது

PREV
click me!

Recommended Stories

ஹமாஸை ஒழிப்பதில் நாங்களே தலைமை தாங்குவோம்.. அமெரிக்காவிடம் அடம்பிடிக்கும் பாகிஸ்தான் இராணுவம்..!
மனமிறங்கி வந்த இபிஎஸ்..! தாழியை உடைத்த ஓ.பி.எஸ்... அதிமுக -பாஜக கூட்டணியில் ஆடுபுலி ஆட்டம்..!