யோவ்… நம்மாளுங்க 2 பேரை அவங்க தூக்கிட்டாங்கய்யா !!  கொந்தளிக்கும் குமாரசாமி…

First Published May 18, 2018, 11:50 PM IST
Highlights
two jds mla obscond they wil kidnapped by bjp partymen


மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்கள் இரண்டு பேரை  பாஜகவினர் கடத்திவிட்டதாக அக்கட்சியின்  தலைவர் குமாரசாமி கொந்தளித்துள்ளார்.

கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. பா.ஜனதாவுக்கு 104 எம்.எல்..க்கள் உள்ளனர். காங்கிரசுக்கு 78 பேரும், ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு 38 உறுப்பினர்களும் உள்ளனர். சுயேச்சைகள் 2 பேரும் உள்ளனர்

இந்த நிலையில் உச்சநீதிமன்ற  உத்தரவுப்படி கர்நாடக சட்டசபையில் நாளை சனிக்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கிறது.

பா.ஜனதாவுக்கு, பெரும்பான்மைக்கு தேவையான எம்.எல்..க்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால், காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்தவர்களை வளைக்க முயற்சி செய்து வருகிறது.

பெரும்பான்மை எண்ணிக்கையை பாஜக  இதுவரை தொடவில்லை. இதற்கிடையே எங்களிடம் பெரும்பான்மை உள்ளது, நாங்கள் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெறுவோம் என பாஜக  தலைவர்கள்  உறுதிபட கூறி வருகின்றனர்.

இதற்கிடையே பாரதீய ஜனதா குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக காங்கிரஸ் ஆடியோ ஒன்றையும் வெளியிட்டது.

காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதா தளம் திடீர் கூட்டணி, பெரும்பான்மையில்லாத பாஜக  ஆட்சி அமைப்பு, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு, பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவு என தொடர்ந்து பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது கர்நாடக அரசியல்.

இதற்கிடையே பாஜகவிடம்  இருந்து எம்.எல்..க்களை பாதுகாக்கும் பணியை காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் மிகவும் கண்காணிப்புடன் செயல்படுத்தி வந்தது. இந்நிலையில் மற்றொரு பரபரப்பு சம்பவமாக குமாரசாமி, தங்களது கட்சியைத் சேர்ந்த இரண்டு எம்.எல்..க்களை  பாஜகவினர் கடத்திவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.

ஆனால் அவர்கள் திருப்பி வந்து நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்வார்கள் என்றும் இதில் காங்கிரஸ் – மஜத கூட்டணி நிச்சயம் ஜெயிக்கும் என்றும் குமாரசாமி தெரிவித்தார்.

click me!