ஒரே தேதியில் இரண்டு தேர்வுகள்.. இளைஞர்களின் கஷ்டத்தை புரிந்து கொள்ளுங்கள்.. எம்.பி அதிரடி கடிதம்.

Published : Feb 11, 2021, 02:21 PM IST
ஒரே தேதியில் இரண்டு தேர்வுகள்.. இளைஞர்களின் கஷ்டத்தை புரிந்து கொள்ளுங்கள்.. எம்.பி அதிரடி கடிதம்.

சுருக்கம்

அந்த  கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது. "மண்டல கிராம வங்கிகளுக்கான அதிகாரிகள் நியமனங்களுக்கான நேர்காணல் பிப்ரவரி 19 ல் இருந்து 22 வரை வங்கிப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ளது என எனக்கு தெரிவிக்கப்பட்டது.  

ஒரே தேதியில் இரண்டு தேர்வுகள் அட்டவணை செய்யப்பட்டுள்ளதால் தேர்வர்களின் பாதிப்பைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை நாடாளுமன்ற  உறுப்பினர் சு. வெங்கடேசன் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.  கிராம வங்கிகளின் அதிகாரி நியமனங்களுக்கான நேர் காணலும், கிளார்க் நியமனங்களுக்கான இறுதித் தேர்வும் ஒரே நாளில் நடைபெறவுள்ளதை மாற்றி, தேர்வர்களின் பாதிப்பைப் போக்குமாறு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன்(சி.பி.எம்) வங்கிப் பணியாளர் தேர்வு ஆணையத்திற்கும், தமிழ்நாடு கிராம வங்கித் தலைவருக்கும் கடிதங்களை எழுதியுள்ளார். 

அந்த  கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது."மண்டல கிராம வங்கிகளுக்கான அதிகாரிகள் நியமனங்களுக்கான நேர்காணல் பிப்ரவரி 19 ல் இருந்து 22 வரை வங்கிப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ளது என எனக்கு தெரிவிக்கப்பட்டது. மண்டல கிராம வங்கிகளின் எழுத்தர் இறுதித் தேர்வுகளும் பிப்ரவரி 20 அன்று நடைபெறுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான அழைப்புக் கடிதங்களும் அனுப்பப்பட்டுள்ளன. 

இந்த இரண்டு தேர்வுகளும் ஒரே தேதியில் இருப்பதால் நிறைய தேர்வர்களைப் பாதிக்கக் கூடும். அவர்களில் சிலர் என்னைத் தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு கண்டு உதவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். 

ஆகவே அதிகாரிகள் நியமனத்திற்கான நேர் காணல் தேதியைப் பிறிதொரு நாளுக்கு மாற்றி இரண்டு தேர்வுகளிலும் பங்கேற்க வேண்டிய பலரின் பாதிப்பைத் தவிர்க்குமாறு வேண்டுகிறேன்" பணி நியமனங்களுக்கான தயாரிப்புகளை மாதக் கணக்கில் செய்யும் இளைஞர்களின் சிரமத்தை கணக்கிற் கொண்டு தேதிகள் மோதாமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்த்துக் கொள்ள வேண்டுமென அக்கடிதத்தில் சு. வெங்கடேசன் எம்.பி தெரிவித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!