மோடி முன்பு தெனாவெட்டாக உட்கார்ந்த டுவிட்டர் சிஇஓ !! நம்ம ஊர்ல இப்படி செய்ய முடியுமா ?

By Selvanayagam PFirst Published Nov 14, 2018, 9:26 AM IST
Highlights

இந்தியாவுக்கு முதன் முறையாக வந்துள்ள டுவிட்டர் நிறுவனத்தில்  சிஇஓ ஜாக் டோர்சே, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்துப் பேசி வருகிறார். நேற்று மோடியை சந்தித்த ஜாக், அவர் முன்பு கால் மேல் கால் போட்டு தெனாவெட்டாக உட்கார்திருந்தார். இது போன்று நம்ம ஊர் தலைவர்கள் யாராவது உட்கார முடியுமா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அமெரிக்காவை தலைமையிடமாக வைத்து செயல்படும், சமூக வலைதள நிறுவனமான, டுவிட்டரை, உலகளவில், 33.6 கோடி பேர், பயன்படுத்துகின்றனர். இந்த வலைதளத்தில், பல பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படுகின்றன.

சில நேரங்களில், இந்த வலைதளத்தில் போலியான தகவல்களும், செய்திகளும் பதிவிடப்படுவதால் பாதிப்பு ஏற்படுவதாக, விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், இந்தியாவுக்கு  முதல் முறையாக வந்த டுவிட்டர் நிறுவன, தலைமை நிர்வாகி, ஜாக் டோர்சே, டில்லியில், காங்கிரஸ்  தலைவர் ராகுலை நேற்று சந்தித்து டுவிட்டரில் பரவும் போலி செய்திகளை தடுப்பது மற்றும் ஆரோக்கியமான உரையாடல் தளமாக்குவது குறித்து விவாதித்தார்.

இதையடுத்து பிரதமர் மோடியை ஜாக் சந்தித்துப் பேசினார். அவரிடத்திலும் போலியான தகவல்கள் குறித்து விவாதித்தார். மோடியை ஜாக் சந்தித்தபோது அவர் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து பேசிய காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன. நம்ம  ஓர் தலைவர்கள் யாராவது மோடி முன்பு இப்படி உத்கார்ந்து பேச முடியுமா ? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மோடியைத் தொடர்ந்து மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்தையும், சந்தித்து ஜாக் பேச்சு நடத்தவுள்ளார். ஐந்து மாநிலங்களில் நடக்கும் சட்டசபை தேர்தல் மற்றும் அடுத்தாண்டு நடக்கவுள்ள, லோக்சபா தேர்தல் குறித்த தவறான தகவல்கள் மற்றும் போலி செய்திகளால், டுவிட்டர் மீதான விமர்சனங்கள் அதிகரித்துள்ளது குறித்து, ஜாக் அமைச்சருடன் பேச்சு நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.

click me!