கூட்டணியை கன்ஃபார்ம் பண்ணிய சிபிஎம் கட்சி…. ஸ்டாலின் – யெச்சூரி சந்திப்பு!!

By Selvanayagam PFirst Published Nov 14, 2018, 7:52 AM IST
Highlights

சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் சீத்தாராம் யெச்சூரி சந்தித்து வரும் நாடாளுமன்றத்  தேர்தலில் கூட்டணியை உறுதி செய்தார். மேலும் மத்தியில் உள்ள பாஜக ஆட்சியை அகற்றுவது குறித்தும் அவர்கள் ஆலோசனை செய்தனர்.


 

தமிழகத்தில் தி.மு.க.வுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆதரவு அளித்து வரும் நிலையில், அந்த கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி நேற்று மாலை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின் போது, மறைந்த முன்னாள் தி.மு.க. தலைவர் கருணாநிதி எழுதிய ‘தாய் காவியம்’ என்ற புத்தகத்தின் ஆங்கில பிரதியை சீதாராம் யெச்சூரிக்கு நினைவு பரிசாக மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

மு.க.ஸ்டாலினுடன் சுமார் 50 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்துவது குறித்து வியூகம் வகுக்கப்பட்டது. தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்தும் பேசப்பட்டது.

இந்த சந்திப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய  சீதாராம் யெச்சூரி , நாட்டின் நலன் கருதி வருகின்ற 2019 நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசை தோற்கடிக்க மதசார்பற்ற சக்திகள் அனைவரும் ஒன்றாக இணையவேண்டும் என்பதே மு.க.ஸ்டாலின் உடனான சந்திப்பின் முக்கிய நோக்கமாக இருந்தது என கூறினார்.

இந்திய அரசியலில் கூட்டணி என்பது முதலில் மாநில அளவில்தான் உருவாக முடியும். தமிழகத்தைப் பொறுத்தவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தி.மு.க. கூட்டணியில் உள்ளது என யெச்சூரி தெரிவித்தார்.

click me!