ஜெயலலிதாவுக்கு புதிய சிலை ….ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் நாளை திறப்பு !!

By Selvanayagam PFirst Published Nov 13, 2018, 8:34 PM IST
Highlights

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின்  புதிய சிலை நாளை திறக்கப்படுகிறது. முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் சிலையைத் திறந்துவைக்கின்றனர்.

சென்னை ராயப்பேட்டையில் அ.தி.மு.க.வின் தலைமையகத்தில் மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் புதிய சிலையை இங்கு நிறுவுவது என அக்கட்சியால் முடிவு செய்யப்பட்டது. 

ஏற்கனவே கடந்த ஆண்டு ஜெயலலிதாவுக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் சிலை அமைக்கப்பட்டது. ஆனால் அந்த டிசலை ஜெயலலிதா போல் இல்லை என தொண்டர்கள் கொதித்துப் போயினர். சமக வலைதளங்களில் இதனை நெட்டிசன்கள் கடுமையாக கிண்டல் செய்து வந்தனர்.

இதையடுத்து அந்த சிலை அகற்றப்பட்டு புதிய சிலை நிறுவ முடிவு செய்யப்பட்டது. அதன்படி புதிய சிலை நிறுவதற்கான பணிகள் முடிவடைந்தன.

இதையடுத்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள .தி.மு.. தலைமையகத்தில் மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் புதிய சிலை நாளை திறக்கப்படுகிறது என தகவல் வெளியாகி உள்ளது.

புதிய சிலையை நாளை காலை 9.30 மணிக்கு  தமிழக முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலலமைச்சர்  ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் திறந்து வைக்கின்றனர்.  இந்த நிகழ்ச்சியில் பல்வேறு அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

click me!