இருபது தொகுதிகளில் அ.தி.மு.க. தோற்றால்? வைகை தரும் வர்றே வாவ்! விளக்கம்...

By vinoth kumarFirst Published Nov 13, 2018, 1:03 PM IST
Highlights

என்னதான் 20 தொகுதி இடைத்தேர்தலுக்கு பொறுப்பாளர்கள் அறிவிப்பு, மண்டல ஊழியர் கூட்டம் என்று அ.தி.மு.க. தில்லாக களமிறங்கிட்டாலும் கூட உள்ளுக்குள்ளே ஒரு உதறல் இருக்கத்தான் செய்கிறது. 

என்னதான் 20 தொகுதி இடைத்தேர்தலுக்கு பொறுப்பாளர்கள் அறிவிப்பு, மண்டல ஊழியர் கூட்டம் என்று அ.தி.மு.க. தில்லாக களமிறங்கிட்டாலும் கூட உள்ளுக்குள்ளே ஒரு உதறல் இருக்கத்தான் செய்கிறது. அது ’ஒருவேளை ஆர்.கே.நகர் போல் தோற்றுவிட்டோமென்றால் தி.மு.க.வோ அல்லது தினகரன், தி.மு.க. இரண்டும் இணைந்துமோ ஆட்சியை கவிழ்த்து விடுவார்களோ! இந்த இடைத்தேர்தல் ரிஸ்க் தேவைதானா?’ என்று நடுங்குகிறார்கள் அ.தி.மு.க. நிர்வாக அமைப்பின் சில முக்கிய புள்ளிகள். 

ஆனாலும் வெளியில் அந்த பயத்தைக் காட்டிக் கொள்ளாமல் ‘போலாம் ரை! போலாம் ரை!’என்று சீன்போட்டு சிறகடிக்கிறார்கள். இந்நிலையில், இந்த பயம் உள்ளே இருப்பதை பற்றி அ.தி.மு.க.வின் கொள்கை பரப்பு துணைச் செயலாளரான வைகை செல்வனிடம் கேட்டபோது...“தி.மு.க. தேர்தலில் வெல்லும் காலமெல்லாம் போயிடுச்சுங்க. ஆர்.கே.நகர்ல டிபாசீட்டை இழந்தவங்க அவங்க. அவங்க இப்போ ஆக்டீவா இருக்குறது பிரியாணி கடை, பியூட்டி பார்லர் கடைகளில் சண்டைபோடுறதுலதான். 

ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தான் ஒரு அராஜக கட்சி என்கிற இமேஜை தி.மு.க. புதுப்பிச்சுட்டே இருக்குது. கண்ணுக்கு எட்டுன தூரம் வரைக்கும் ஆட்சி வாய்ப்பே இல்லாத நிலையிலேயே இந்த அராஜகம் பண்ணும் நபர்கள், ஆட்சிக்கு வந்தால் என்னாகும்னு மக்கள் தெளிவா யோசிச்சு, பேசுறாங்க. அதனால மக்கள் தி.மு.க.வை தேர்வு செய்ய வாய்ப்பே இல்லை. 

தினகரன் ஆர்.கே.நகர்ல எப்படி ஜெயிச்சார்னு இருபது ரூபா நோட்டைக் கேட்டால் தெரியும். அவரோட அந்த கோஷ்டியும் இடைத்தேர்தல்ல டிபாசீட்டை நினைச்சு கூட பார்க்க முடியாது. இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து என்னதான் குட்டிக்கர்ணம் போட்டாலும் இந்த ஆட்சியை எதுவுமே செய்ய முடியாது. என்றிருக்கிறார். கவனிப்பொம்!

click me!