நான் இன்னும் அரசியலில் முழுசா இறங்கலை... இந்த ரஜினிகாந்த் ஒன்றும் முட்டாள் அல்ல... செம கடுப்பில் சூப்பர் ஸ்டார்...!

By vinoth kumarFirst Published Nov 13, 2018, 12:06 PM IST
Highlights

நான் இன்னும் முழுசா அரசியல்ல இறங்கவே இல்லை. இப்படி அன்றாட நிகழ்ச்சிகள் பத்தி திடீர் திடீர்னு கேள்வி கேக்குறது எந்த விதத்துல நியாயம் என்றும் நிருபர்களை நோக்கி கேள்வி எழுப்பினார் ரஜினி.

யார் அந்த 7 பேர்? என்று நிருபரை நோக்கி ரஜினி கேள்வி கேட்டது வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, இன்று காலை 11.30 மணிக்கு தனது போயஸ் இல்லத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். தன்னிடம் கேட்கப்பட்ட கேள்வி தெளிவாக இல்லை என்றும் இன்னும் அரசியலில் முழுவதுமாக இறங்காத நிலையில் அன்றாட நிகழ்வுகள் குறித்து தன்னிடம் கேள்விகள் கேட்பது சரியில்லை என்றும் கூறினார். 

‘ராஜீவ் காந்தி கொலை வழக்கு சம்பந்தமா கேட்ட கேள்விகள் தெளிவா இல்லாததனாலதான் யார் அந்த 7 பேர்ன்னு கேட்டேனே ஒழிய, அதுகூட தெரியாத முட்டாள் இல்ல இந்த ரஜினிகாந்த். பேரறிவாளன் ஜாமின்ல வந்தப்ப அவர்கிட்ட பத்து நிமிஷம் பேசி ஆறுதல் சொன்னவன் நான்.

அப்படிப்பட்ட நிலையில அவங்க மேல எந்த அக்கறையும் இல்லாதவன் மாதிரி என்னை சித்தரிக்காதீங்க. மீடியாவுல திரிச்சிபோட்டா இப்பல்லாம் மக்கள் ஈஸியா கண்டுபிடிச்சிடுவாங்க. ராஜீவ் கொலை வழக்குல சிக்கின 7 பேரும் 27 வருஷமா சிறை தண்டனை அனுபவிச்சட்டதால அவங்களை இனியாவது உடனே விடுதலை செய்யணும்ங்குறதுதான் என்னோட அபிப்ராயம்’ என்றார் ரஜினி. 

அதே சமயம் நான் இன்னும் முழுசா அரசியல்ல இறங்கவே இல்லை. இப்படி அன்றாட நிகழ்ச்சிகள் பத்தி திடீர் திடீர்னு கேள்வி கேக்குறது எந்த விதத்துல நியாயம் என்றும் நிருபர்களை நோக்கி கேள்வி எழுப்பினார் ரஜினி.

click me!