வாட்டாள் நாகராஜை கர்நாடக அரசு பார்த்துக்கொள்ளும்...’2.0’ எதிர்ப்புக்கு ரஜினி தெனாவட்டு பதில்

By vinoth kumarFirst Published Nov 13, 2018, 12:21 PM IST
Highlights

பி.ஜே.பி. ஆபத்தான கட்சி என்று தான் கூறிய கருத்தும் திரித்துக் கூறப்பட்டுள்ளதாகக் கூறிய ரஜினி ஒரு பலசாலியை எதிர்க்க பத்துப்பேர் ஒன்று கூடுகிறார்கள் என்றால் யார் உண்மையான பலசாலி என்பது புரியவில்லையா என்று நிருபர்களை நோக்கி எதிர்க்கேள்வி எழுப்பினார்.

நேற்று விமான நிலையத்தில் தந்த பேட்டியின்போது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட, ’யார் அந்த 7 பேர்’, மற்றும் ’பி.ஜே.பி. ஆபத்தான கட்சி’ ஆகிய இரு கருத்துக்களுக்கு மட்டும் விளக்கம் அளித்துவிட்டு எஸ்கேப் ஆவதிலேயே குறியாக இருந்தார் ரஜினி. அடுத்தடுத்து கேள்விகள் கிளம்பியபோது கேட்டின் உள்ளே நுழைய முயன்றார். மறுபடியும் வெளியே வந்தார். 

கடைசியாக ஒரு நிருபர் ‘உங்க ‘2.0’ படத்தை கர்நாடகாவுல ரிலீஸ் பண்ணவிடமாட்டோம் என்று வாட்டாள் நாகராஜ் சொல்லியிருக்கிறாரே என்று கேட்டபோது, ‘அதை கர்நாடக அரசாங்கும் பாத்துக்கும்’ என்று தெனாவட்டாக பதில் அளித்தார்.

click me!