தூத்துக்குடிக்கு புது கலெக்டர்….  புது எஸ்.பி. …. தூக்கி அடிக்கப்பட்ட பழைய  கலெக்டர் மற்றும் எஸ்.பி. !!

Asianet News Tamil  
Published : May 23, 2018, 09:11 PM ISTUpdated : Sep 19, 2018, 02:24 AM IST
தூத்துக்குடிக்கு புது கலெக்டர்….  புது எஸ்.பி. …. தூக்கி அடிக்கப்பட்ட பழைய  கலெக்டர் மற்றும் எஸ்.பி. !!

சுருக்கம்

tuticorine collecter and sp transferred

தூத்துக்குடியில் ஏற்பட்ட வன்முறையை அடுத்து மாவட்ட ஆட்சியர் வெங்கடேசன் அதிரடியாக மாற்றப்பட்டு, நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். இதே போன்று எஸ்.பி.மகேந்திரனும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் அங்கு பதற்றமான சூழல் இருக்கும் நிலையில் அம்மாவட்ட கலெக்டர் வெங்கடேசன் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நெல்லை கலெக்டர் சந்தீப் நந்தூரி தூத்துக்குடி கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வெங்கடேசன் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் திட்ட இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நெல்லை கலெக்டராக ஷில்பா பிரபாகர் சதீஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

மாவட்ட எஸ்.பி.யாக இருக்கும் மகேந்திரனும் இடமாற்றம் செய்யப்பட்டு, நீலகிரி மாவட்ட எஸ்.பி முரளி ராம்பா அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். மகேந்திரன் வடசென்னை போக்குவரத்து துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். வடசென்னை போக்குவரத்து துணை ஆணையராக இருந்த சன்முகப்பிரியா, நீலகிரி எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். 

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து இந்த பணியிட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.   ஸ்டெர்லைட் போராட்டத்தை சரியாக கையாளததால் தூத்துக்குடி கலெக்டர், எஸ்.பி ஆகியோருக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

விஜய் எல்லாம் அதிமுகவை விமர்சிக்கலாமா..? தவெக-வே லாட்டரி பணத்தில்தான் நடத்தப்படுது.. ஜெயகுமார் அதிரடி அட்டாக்..!
உறுதி கொடுத்த ராகுல்..! இறுதியான திமுக கூட்டணி..! அறிவாலயம் வளைத்த கட்சிகளின் டீடெய்ல் லிஸ்ட்..!