
கடந்த 2014 ஆம் நிதி ஆண்டின் போது, பா.ஜ.க ஒரு தகவல் அறிக்கை சமர்ப்பித்தது. அதில் பா.ஜ.கவிற்கு நன்கொடை வழங்கிய கார்பரேட் நிறுவனங்களின் விவரம் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி பா.ஜ.க கட்சி 363 கோடி நிதி வசூலித்திருக்கிறது.
அதில் மூன்றில் ஒரு பங்கு நிதி பல்வேறு கார்பரேட் நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்டிருக்கிறது. அதில் ஆயிரத்து நானூற்று என்பதுக்கும் மேற்பட்ட நிருவனங்கள் தனித்தனியாக 20,000 மற்றும் அதற்கும் மேலான தொகையை நன்கொடையாக அளித்திருக்கின்றன.
இந்த பட்டியலில் தரப்பட்டிருக்கும் தகவலின் படி, பா.ஜ.கவிற்கு 2013-2014ஆம் நிதி ஆண்டில், அதிக அளவிலான நன்கொடை தந்ததாக குறிப்பிடப்பட்டிருக்கும் நிறுவனம் ”பாரதி குழுமத்தின் சத்யா தேர்தல் அமைப்பு” ஆகும்.
இந்த நிறுவனம் 41.37 கோடி ரூபாயை நன்கொடையாக கொடுத்திருக்கிறது. வேதாந்த குழுமம் 22.5 கோடி ரூபாய் நன்கொடை கொடுத்து இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது. ஸ்டெர்லைட் நிறுவனமும் அந்த நிதியாண்டில் 10 கோடி ரூபாயை பா.ஜ.கவிற்கு அளித்ததாக பா.ஜ.கவின் தகவல் பட்டியல் தெரிவிக்கிறது.