சசிகலா  ஏற்ற சபதம் நிறைவேறியது … அதிமுக துணைபொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் பெருமிதம்…

 
Published : Feb 18, 2017, 11:00 PM ISTUpdated : Sep 19, 2018, 01:35 AM IST
சசிகலா  ஏற்ற சபதம் நிறைவேறியது … அதிமுக துணைபொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் பெருமிதம்…

சுருக்கம்

சசிகலா  ஏற்ற சபதம் நிறைவேறியது … அதிமுக துணைபொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் பெருமிதம்…

தமிழக சட்டப் பேரவையில் இன்று நடைபெற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான  அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில்  வெற்றி பெற்றது.

திமுக, காங்கிரஸ், ஓபிஎஸ் அணி என அனைத்துத் தரப்பினரும் இன்று சட்டப் பேரவைக்கு வந்த நிலையில் எடப்பாடி நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான தீர்மானத்தை முன்மொழிந்தார்.

ஆனால் திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தியதால் பெருடம் அமளி ஏற்பட்டது. திமுக் உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேற்றபபட்டனர்.

இதைத் தொடர்ந்து, நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி 122 உறுப்பினர்களின், ஆதரவைப் பெற்று பெற்றார்.

இதனையடுத்து  ஜெயலலிதா நினைவிடத்தில் முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள்  மற்றும் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி தினகரன், மறைந்த முதலமைச்சர் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நல்லாசியுடன், தமிழகத்தில் அதிமுக ஆட்சி நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தி.மு.க.வுடன் கூட்டு சேர்ந்து, கழக ஆட்சியை சீர்குலைக்க துரோகிகள் செய்த சதி முறியடிக்கப்பட்டுள்ளதாகவும். ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா  ஏற்ற சபதம் இன்று நிறைவேறியது … என்றும் அதிமுக துணைபொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!