பறிபோகிறதா தினகரனின் MLA பதவி! ஹவாலா ஸ்டைல் பண பட்டுவாடா அம்பலமானதால் அதிரடியா?

First Published Jan 19, 2018, 2:21 PM IST
Highlights
TTV supporters says Dinakaran success secret is 20 rs in RK Nagar election


ரூ.10,000 தருவதாக கூறி இவர்கள் 20 ரூபாயை ஹவாலா ஸ்டாலில் விநியோகம் செய்தோம் இது எங்கள் மாஸ்டர் ப்ளான் என தினகரனின் ஆதரவாளராக இருந்த முசிறி தொகுதி MLA ராஜசேகர் கூறியுள்ளது தினகரனுக்கு சிக்கல் எழுந்துள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்களர்களுக்கு ஹவாலா முறையில் 20 ரூபாய் டோக்கன்  கொடுத்த விவகாரத்தில் மோதல் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதால் தினகரனின் எம்எல்ஏ பதவி பறிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தியாவிலேயே எங்கும் இல்லாத அளவிற்கு, தமிழகத்தில் அதுவும் தலைநகரான சென்னையில் உள்ள ஒரு தொகுதியின் இடைதேர்தளுக்காக செலவு செய்யப்பட்ட தொகை, அரசியல் வட்டாரத்தையே நடுங்க வைத்தது.

தேர்தல் நடத்துவதற்கு சில நாட்களுக்கு முன்பு பணம் அதிகமாக வாக்களர்களுக்கு வழங்கப்பட்டது தொடர்பாக மீண்டும் தேர்தல் ரத்தாகும் என செய்தி பரவியது. தேர்தலை ரத்து செய்தது தேர்தல் ஆணையம். சுமார் ஆறுமாதத்திற்கு பிறகு தேர்தலை நடத்தியது, வாக்குப்பதிவுக்கு பத்தே நாள் உள்ள இடப்பட்ட காலத்தில் பெரும் தொகை வாக்களர்களுக்கு வழங்கப்பட்டது. ஆளும் கட்சி, சுயேச்சை வேட்பாளர் தினகரன் போட்டிபோட்டுக்கொண்டு பணத்தை வாரி இறைத்தது பெரும் புகைசைளை உண்டாக்கியது.

இந்நிலையில், தேர்தலுக்கு முந்தைய நாள் தினகரன் தரப்பினர் வாக்காளர்களுக்கு 20 ரூபாய் டோக்கன்களை கொடுத்ததாகவும், தேர்தல் முடிந்த பிறகு, 20 ரூபாய் டோக்கன்களை திரும்ப பெற்று ரூ.10 ஆயிரம் என ஹவாலா வாக்குகளை கைப்பற்றியதாக தகவல்கள் கிடைத்தது.

தினகரன் அணியினர் இம்ப்ளிமென்ட் செய்த இந்த ஹவாலா ஸ்டைலுக்கு, எப்படியும் நமக்கு பணம் கிடைத்துவிடும் என்ற ஆவலில் சின்னமே தேயும் அளவிற்கு தேடி பிடித்து பட்டிடனை அமுக்கியுள்ளனர். இது தேர்தல் முடிவு நாளில் கண்கொள்ளாக பார்த்தோம்,  மெகா வெற்றி கிடைத்தது. 50 சதவீதத்திற்கும் அதிக வாக்குகளை பெற்று ஆளும் கட்சி, எதிர்கட்சி என தூக்கி அடித்து விட்டார் தினகரன். தேர்தலும் முடிந்தது, ரிசல்ட்டும் வெளிவந்தது, தொடந்து அரசியல் கட்சிகள் பணம்கொடுத்தும், ஹவால முறையில் டோக்கன் கொடுத்தான் வாங்கிய வெற்றியென தொடர்ந்து சொல்லிவருவதால், டோக்கனுக்கு பதிலாக பணம் தருவதில் தாமதமானதா சொல்லப்படுகிறது.

இந்நிலையில், ரூ.20 டோக்கன் திட்டம் முக்கிய  நிர்வாகிகளின் மாஸ்டர் ப்ளான்  என்றும், எதிர்கட்சிகளின் சூழ்ச்சியை முறியடிக்கவே ஜெ. சிகிச்சை குறித்த வீடியோ வெளியிடப்பட்டது என்றும் இதை தினகரன் சொல்லித்தான் வெற்றிவேல் வீடியோவை வெளியிட்டார் என பேசியிருக்கிறார். இவருடைய பேச்சால் பெரும் சர்ச்சை ஏற்பட்டு உள்ளது. முசிறியில் தினகரன் அணி  நிர்வாகிகள் கூட்டத்தில் ராஜசேகர் வீடியோ வெளியானதால் தினகரனின் MLA பதவி பறிபோகும் நிலை வரலாம் என தகவல்கள் கிடைத்துள்ளது.

இந்த பகீர் தகவல் பரவுவதை அடுத்து சுயேச்சை MLA பதவி பறிக்கப்படுமா?, எம்எல்ஏவாக நீடிப்பாரா? என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது. இந்த பணபட்டுவாடா குறித்து மத்திய வருவாய் புலனாய்வு துறை மற்றும் அமலாக்கத் துறை தீர விசாரணை நடத்தி அறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்தால் தினகரன் தகுதிநீக்கம் செய்வது, வெற்றியை ரத்து செய்வது உள்ளிட்ட அடுத்த கட்ட நடவடிக்கை  பாயும் என தெரிகிறது.

click me!