உயர்நீதிமன்றத்தில் டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் முறையீடு

Asianet News Tamil  
Published : Sep 14, 2017, 12:55 PM ISTUpdated : Sep 19, 2018, 01:10 AM IST
உயர்நீதிமன்றத்தில் டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் முறையீடு

சுருக்கம்

TTV support MLAs appealed to the High Court

சட்டப்பேரவையில் எடப்பாடி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் முறையீட்டுள்ளனர். இது தொடர்பாக தமிழக அரசின் தலைமை வழக்கறிஞருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு கடிதம் எழுதினார். பின்னர், இது தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. 

இந்த நிலையில், டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள், எடப்பாடி அரசு  பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு உத்தரவிடக்கோரி, மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.

வழக்கு விசாரணையின்போது, டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களின் முறையீட்டைத் தொடர்ந்து, தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று உடனடியாக தெரிவிக்குமாறு தலைமை வழக்கறிஞருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று பிற்பகல் 2.15 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

சிபிஐ விசாரணை வளையத்தில் விஜய்.. நாளை என்ன நடக்கும்? டெல்லி போலீசிடம் உதவி கேட்ட தவெக!
ரத்தக் களரியான ஈரான்... காமெனிக்கு எதிராக போராட்டங்களை தூண்டிய டிரம்ப்.. உலுக்கும் 217 பேர் மரணம்..!