பூத் ஏஜென்ட்க்கு கூட ஆள் இல்லாத தலைவர் டிடிவி!! பங்க படுத்திய கே.சி.கருப்பணன்!

By Vishnu PriyaFirst Published Feb 17, 2019, 3:29 PM IST
Highlights

ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணத்தில் இருக்கிறார் அ.ம.மு.க.வின் துணைப் பொதுசெயலாளரான தினகரன். போகுமிடங்களில் எல்லாம் அ.தி.மு.க.வை ‘விரைவில் காலியாகப்போகுது ஆட்சி’ என்று திட்டி சபித்துக் கொண்டிருக்கிறார். 
 

ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணத்தில் இருக்கிறார் அ.ம.மு.க.வின் துணைப் பொதுசெயலாளரான தினகரன். போகுமிடங்களில் எல்லாம் அ.தி.மு.க.வை ‘விரைவில் காலியாகப்போகுது ஆட்சி’ என்று திட்டி சபித்துக் கொண்டிருக்கிறார். 

இந்நிலையில், தினகரனுக்கு எதிராக செம்ம சவுண்டு விட்டுள்ளார் மாசு கட்டுப்பாட்டு வாரியத்துறை அமைச்சரான கருப்பணன். ஈரோடு மாவட்டம் கவுந்தபாடியில் ஜெ., பேரவை சார்பாக நடந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர்...”பி.ஜே.பி.யின் ஏஜெண்டாக அ.தி.மு.க. செயல்படுவதாக டி.டி.வி. தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். அவரைப் பார்த்து ஒரேயொரு கேள்வி கேட்கிறேன்..

உங்க கட்சியில நாற்பது தொகுதிகளிலும் பூத் ஏஜெண்டு பணியை செய்ய ஆட்கள் இருக்கிறார்களா? அதுக்கு பதிலைச் சொல்லுங்கய்ய முதல்ல. வெறும் வாக்குச்சாவடி முகவர் பணிக்கு ஆளில்லாத நபரெல்லாம் எங்கள் கட்சியைப் பற்றிப் பேச எந்த தகுதியுமில்லை.” என்று கடித்து துப்பிவிட்டார். 

இது ஒருபுறமிருக்க, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அ.ம.மு.க. நிர்வாகிகள் முக்கியமான நபர்களை சமீபத்தில்தான் தி.மு.க.வினுள் கொண்டுபோய் சேர்த்திருந்தார் செந்தில்பாலாஜி. 

இப்போது அதே ஈரோட்டில் ‘பூத் ஏஜெண்டுக்கு கூட ஆள் இல்லாத கட்சி’ என்று தங்கள் கட்சி பெயரெடுத்துள்ளதால் செம்ம டென்ஷனில் இருக்கிறார் தினகரன். கருப்பணனின் கமெண்டை பற்றி ஈரோடு மாவட்ட அ.ம.மு.க. நிர்வாகிகளுக்கு போன் போட்டு பேசிய வெற்றிவேல் எம்.எல்.ஏ. “கருப்பணனிடம் எல்லாம் பாட்டு வாங்கி கட்டுமளவுக்கு ஆகிவிட்டதா நிலைமை? யார் இந்த கருப்பணன்...’நொய்யல் ஆற்றில் வரும் தண்ணீரில் இருக்கும் நுரையெல்லாம் திருப்பூர் சாய ஆலைகளினுடையது அல்ல, எல்லாமே கோயமுத்தூர் மக்கள் சோப்பு போட்டு குளிப்பதால் வந்த நுரை’ அப்படின்னு சொன்ன அறிவாளிதான் இவர். சொந்த மாவட்டத்துல எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாசலத்தின் அதிரடி அரசியலுக்கு தாக்கு பிடிக்க முடியாமலும், அவர் வைக்கும் வெளிப்படை குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்ல முடியாமலும் ஓடி ஒளியும் கருப்பணன் நம்மை கேவலமாய் பேசுவதா?” என்று புலம்பித்தள்ளி இருக்கிறார்.

click me!