கூட்டணிக்காக என்னை எத்தனையோ பேர் வந்து பார்க்கிறாங்க! ஈழ விடுதலைக்காக 35 வருடமா போராடினோம்: கொஞ்சம் கூட சிரிக்காமல் ஜோக்கடிக்கும் சீமான்.

By Vishnu PriyaFirst Published Feb 17, 2019, 1:52 PM IST
Highlights

தமிழக அரசியல்வாதிகளில் அநியாயத்துக்கு கழுவிக் கழுவி ஊற்றப்படும் தலைவர்களில் ஒருவர் சீமான். ஆக்சுவலாக அவர் நாம் தமிழர்இயக்கம் துவங்கிய புதிதில் ஆக நிச்சயமாக அவருக்கென பெரும் மரியாதையும், அவர் பின்னால் பெரும் படையும், அவரது வார்த்தைகளை கண்டு வரிப்புலியாய் பொங்கும் வீரமும் தமிழக இளைஞர்களிடம் இருந்தது. ஆனால் எப்போது அவர் தன்னை தமிழீழ விடுதலிப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனோடு அளவுக்கு அதிகமாக இணைத்துப் பேச துவங்கினாரோ அன்றே வீழ துவங்கியது அவரது கம்பீரம்.

தமிழக அரசியல்வாதிகளில் அநியாயத்துக்கு கழுவிக் கழுவி ஊற்றப்படும் தலைவர்களில்  ஒருவர் சீமான். ஆக்சுவலாக அவர் ‘நாம் தமிழர்’ இயக்கம் துவங்கிய புதிதில் ஆக நிச்சயமாக அவருக்கென பெரும் மரியாதையும், அவர் பின்னால் பெரும் படையும், அவரது வார்த்தைகளை கண்டு வரிப்புலியாய் பொங்கும் வீரமும் தமிழக இளைஞர்களிடம் இருந்தது. ஆனால் எப்போது அவர் தன்னை தமிழீழ விடுதலிப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனோடு அளவுக்கு அதிகமாக இணைத்துப் பேச துவங்கினாரோ அன்றே வீழ துவங்கியது அவரது கம்பீரம்.

 

அதேபோல் எந்த கொள்கையை நோக்கி எழுச்சியுடன் பயணித்தாரோ பிற்காலத்தில் அதே கொள்கையை எதிர்க்கும் கட்சிகளுடன் உறவாடியதும், அதை வியாக்யானமான வார்த்தைகளை சொல்லி நியாயப்படுத்தியதும் சீமானின் சரிவுக்கு மிகப்பெரிய காரணங்களாக அமைந்தன.

இந்நிலையில் இந்த நாடாளுமன்ற தேர்தலில்  நாற்பது தொகுதிகளில் தன் அமைப்பை தனியாய் களமிறக்குபவர், அதற்கான வேட்ப்பாளர்களையும் அறிவித்துவிட்டார். இவரது  செயல் அனல் பறக்கும் தமிழக அரசியல் அரங்கில் பெரிதாய் எந்த அதிர்வையும் ஏற்படுத்தவில்லை. உடனே சீமான் வெளியிட்ட சில கருத்துக்கள்தான்  தாறுமாறாக வைரலாக துவங்கியுள்ளன அரசியலரங்கில்.

 

வாசித்துப் பார்த்தால் நூற்று ஓரு சதவீதம் சிரிப்பை தரும் அந்த தடாலடி பேட்டியின் ஹைலைட் பாயிண்டுகள் இதோ உங்களுக்காக....

*        தேர்தல் அதிர்வுகள் துவங்கியதும் முக்கிய கட்சிகள் உட்பட எத்தனையோ பேர் என்னைப் பார்க்க வந்தாங்க, உருக்கமா பேசி இழுத்தாங்க...‘எங்க கூட நீங்க வாங்க தம்பி. நீங்க நல்லா இருப்பீங்க.’ன்னு ஆசை காட்டி சொன்னாங்க. உடனே நான் கேட்டேன்...’நான் நல்லா இருப்பேன் சரி. இந்த நாடும் மக்களும் நல்லா இருப்பாங்களா?’ன்னு. வந்தவங்கிட்ட இதுக்குப் பதில்லை.

*        சிலருக்கு கட்சியை காப்பாற்றுவதே லட்சியமா இருக்குது! அப்ப எந்த லட்சியத்துக்காக கட்சி துவங்கினாங்களாம்? இதை நான் அவங்ககிட்ட கேள்வியா கேட்கிறேன். 

*   முப்பத்தைந்து ஆண்டுகளாக ஈழ விடுதலைக்காக போராடினோம். எத்தனையோ உயிர்களைப் பறிகொடுத்தோம். ஆனாலும் தனி ஈழம் அடையமுடியலை. அதுக்காக அப்படியே விட்டுட்டுப் போயிட்டோமா என்ன? இப்பவும் போராடுறோம், இன்னும் சாக தயாராகத்தானே இருக்கிறோம்?

*   என்னுடைய பாதை பக்த்சிங் பாதைதானே தவிர பா.ம.க. பாதையில்லை.

இப்படி கன்னாபின்னாவென சிரிப்பு வரும் பேட்டியை செம்ம சீரியஸாக கொடுத்த சீமான், கடைசி வரியில் ச்சும்மா இருக்கும் ராமதாஸை வம்புக்கு இழுத்திருப்பதுதான் எக்ஸ்ட்ரா ஹைலைட்டு.

இதுக்கு மருத்துவர் அய்யா தரப்போகும் ரிப்ளை ரிவிட்டை நினைச்சா இப்பவே தல சுத்துது!

 

click me!