இப்போ வேண்னா சந்தோஷப்பட்டுக்கோங்க… ஆனா எதிர்காலம் எங்களுக்குத்தான்… தஞ்சையில் மாஸ் காட்டிய தினகரன் !!

Published : May 29, 2019, 10:45 PM IST
இப்போ வேண்னா சந்தோஷப்பட்டுக்கோங்க… ஆனா எதிர்காலம் எங்களுக்குத்தான்… தஞ்சையில் மாஸ் காட்டிய தினகரன் !!

சுருக்கம்

தேர்தல் முடிவுக்குப் பிறகு தஞ்சை மண்ணில்  இருந்து மீண்டும் அமமுகவின் எழுச்சி பயணம் தொடங்குவதாகவும், அரசியல் ரீதியாக அமமுகவை வீழ்த்திவிடலாம் என்று நினைப்பவர்கள் இப்போது வேண்டுமானால் அற்ப சந்தோஷம் அடையலாம், ஆனால் எதிர்காலம் எங்களுக்குத் தான் என்று அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன தெரிவித்தார்.  

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் மற்றும் 22 தொகுதிகளின் இடைத் தேர்தல் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமமுக படுதோல்வியை சந்தித்தது. பல இடங்களில் மமூன்றாவது இடத்தைக் கூட பிடிக்க முடியவிலலை. 

அதிமுக, திமுகவுக்கு போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட அமமுக. அனைத்து மொத்தமாக  22.25 லட்சம் வாக்குகளையே பெற்றது. பெங்களூருவில் நேற்று சசிகலாவை சந்தித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த தினகரன், தற்போது வாக்குப் பதிவு இயந்திரத்துக்குத்தான் வெற்றி கிடைத்திருக்கிறது. மீண்டும் வாக்குச் சீட்டு முறையை கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்நிலையில் தஞ்சையில் இன்று  அமமுக பொருளாளர் ரங்கசாமி மகன் திருமண விழாவில் தினகரன், திருமணத்தில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், .தேர்தல் முடிவுக்குப் பிறகு தஞ்சை மண்ணில் மீண்டும் அமமுகவின் எழுச்சி பயணத்தை ஒரு மங்களகரமான நிகழ்விலிருந்து தொடங்க இருக்கிறோம் என தெரிவித்தார்.

அரசியல் ரீதியாக அமமுகவை வீழ்த்திவிடலாம் என்று நினைப்பவர்கள் இப்போது வேண்டுமானால் அற்ப சந்தோஷம் அடையலாம். எத்தனை சோதனைகள் வந்தாலும், வருங்காலம் நமதே என்று நிரூபிக்கும் விதமாக தொடர்ந்து செயல்படுவோம் என உறுதியுடன் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!