வேலூர் மாவட்டம் ஆம்பூரில், வணிக வரித்துறை அமைச்சர் கே.சி வீரமணி பேசிய பேச்சால் தமிழக அரசியலில் ஒரு பரபரப்பு காணப்படுகிறதுவேலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் பதவியிலிருந்து கே.சி. வீரமணியை நீக்கியதாக நேற்று டிடிவி தினகரன் அறிவித்து இருந்தார்.இதனை தொடர்ந்து அவரது பதவியை ஆம்பூர் எம்எல்ஏ பால சுப்ரமணிக்கு வழங்கப்பட்டது.முன்னதாக எம்எல்ஏ பால சுப்பிரமணி, கே.சி வீரமணிக்கு ஆதரவு தெரிவித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், இன்று காலை ஆம்பூருக்கு வருகை தந்த அமைச்சர் கேசி.வீரமணியை அவர்களுடை ஆதரவாளர்கள் தேசிய நெடுஞ்சாலையில் நின்றபடியே வரவேற்றனர். அப்போது பேசிய வீரமணி , தினகரனை பற்றி கிண்டலாக கருத்து தெரிவித்தார். அதில் "தினகரன் நடிகர் வடிவேலு போன்று நான் தான் துணை பொதுச்செயலாளர், நான் தான் துணை பொதுச்செயலாளர் என்று கூறி வருகிறார். நீங்கள் யாரும் அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம். அது ஒரு கொலைக்கார குடும்பம் என்று பேசினார்.ஆதரவாளர்கள் மத்தியில் வீரமணி இவ்வாறு பேசியது, அவருடைய ஆதரவாளர்களுக்கு குளிர்ச்சியாக இருந்தாலும், அரசியல் வட்டாரத்திலும் மக்கள் மத்தியிலும் இந்த விவகாரம் குறித்த வீடியோ பதிவு காட்டுத்தீ போல் பரவி வருகிறது.