ஓபிஎஸ்க்கு ஷாக் மேல் ஷாக் கொடுக்கும் டி.டி.வி. ! கலக்கத்தில் ரவீந்திர நாத் ! யார் அந்த தேனி வேட்பாளர் ?

By Selvanayagam PFirst Published Mar 22, 2019, 7:15 AM IST
Highlights

தேனி தொகுதியில் போட்டியிடும் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் மகன் ரவீந்திர நாத்துக்கு கடும் டஃப் கொடுக்கும் வகையில் அமமுக சார்பில் பலமான வேட்பாளரை நிறுத்த டி.டி.வி.தினகரன்  முடிவெடுத்துள்ள நிலையில்  தற்போது தினகரனின் மனைவி அனுராதாவையே களமிறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ஓபிஎஸ் கதிகலங்கிப் போய் நிற்பதாக தெரிகிறது

கடந்த வாரம் நடந்த பிரஸ் மீட்டில்  பேசிய அமமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், தேனி என் தொகுதிதான்… என்னை கூட அங்கு நிற்க சொல்லி கட்சிக்காரங்க கேட்குறாங்க. நான் கூட அங்கு நிற்கலாம் என பேட்டி அளித்திருந்தார்.

இதையடுத்து தேனி தொகுதியில் ஸ்ட்ராங்கான ஒரு வேட்பாளைரை களம் இறக்க தினகரன் முடிவு செய்து அதற்கான பணிகளை தொடங்கியிருக்கிறார். அமமுக சார்பில் போட்டியிடும் 24 தொகுதி வேட்பாளர்களை தினகரன் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் தேனி உள்ளிட்ட15 தொகுதிகளின் வேட்பாளர்களை டி.டி.வி. இன்று அல்லது நாளை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேனி தொகுதியைப் பொறுத்தவரை அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் தனது தந்தை ஓ.பன்னீர்செல்வம், வருவாய்த் துறைஅமைச்சர் ஆர்.பி.உதயகுமாருடன் பிரச்சாரத்தையும் தொடங்கிவிட்டார். 

ஆனால் அமமுக சார்பில்  தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மற்ற தொகுதிகளுக்கு டிடிவி தினகரன் இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. இந்த இரண்டு தொகுதிகளுக்கு பலமான வேட்பாளரைத் தேடுவதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து தேனி தொகுதியில் யார் நிறுத்தப்படுவார்களோ என்ற கலக்கத்தில் இருக்கிறதாம் ஓபிஎஸ் தரப்பு. முதலில் இளவரசியின் மகன் விவேக் ஜெயராமன் நிறுத்தப்படலாம் என  தகவல் வெளியானது. ஆனால் விவேக் தேர்தலில் நிற்க விரும்பவில்லை என மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து தினகரன், அல்லது முன்னாள் அமைச்சர் துரைராஜின் மகனும் சேடப்பட்டி அமமுக ஒன்றியச் செயலாளருமான தனராஜ் ஆகிய இருவரில் ஒருவர் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இறுதியாக டி.டி.வி.தினகரன் தனது மனைவி அனுராதாவையே களத்தில் இறக்க முடிவு செய்துள்ளார்.

தினகரனும் தங்க தமிழ்ச்செல்வனும் அரசியல் ரீதியாக ஓபிஎஸ்ஸுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டவர்கள். அதனால், அவர்கள் தேனி தொகுதியில் நிற்கும் ரவீந்திரநாத்குமாரை வீழ்த்துவதன் மூலம் ஓ.பன்னீர் செல்வத்துக்கு அரசியலில் சறுக்கலை ஏற்படுத்த நினைப்பதாக அமமுக தொண்டர்கள் கூறுகின்றனர்.

click me!