
அதிமுகவில் இருந்து என்னை விலக்குவதற்கு என்ன காரணம் , என்ன நெருக்கடி என சொல்ல மறுக்கிறார்கள் என டிடிவி.தினகரன் கூறினார்.
இதுகுறித்து டிடிவி.தினகரன், செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
நான் அதிமுக துணை பொது செயலாளராக நியமிக்கப்பட்டு 2 மாதம் ஆகிறது. இதுவரை கட்சியை நல்ல முறையில் நடத்தி வருகிறேன். என்னால் பாதிப்பு ஏற்படும் என்றும், சிலருக்கு பிரச்சனை ஏற்படுகிறது என்றும் கூகிறார்கள்.
அதற்கான காரணத்தை என்னிடம் யாரும் கூறவில்லை. அவர்கள் கூறும் காரணத்தை ஏற்று கொள்ளும் பக்குவம் உள்ளவன்தான் நான்.
அமைச்சர்களுக்கு ஏதோ ஒரு பயம் இருக்கிறது. ஆனால், அது என்னவென்று தெரியவில்லை. என்னுடனே பழகியவர்கள், திடீரென விலகியது ஏன் என்று புரியவில்லை.
என்னிடம் செங்கோட்டையன் , சீனிவாசன் போன்றோர் சாதாரணமாகத்தான் பேசிவிட்டு சென்றனர். ஆனால், திடீரென தடம் மாறிவிட்டனர். அவர்களுடன் நான் சரி சமமாக போட்டியிட தயாராக இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.