"தினகரன் ஏற்பாடு செய்திருந்த எம்எல்ஏக்கள் கூட்டம் ரத்து" - செங்கோட்டையன் அறிவிப்பு

Asianet News Tamil  
Published : Apr 19, 2017, 11:37 AM ISTUpdated : Sep 19, 2018, 03:10 AM IST
"தினகரன் ஏற்பாடு செய்திருந்த எம்எல்ஏக்கள் கூட்டம் ரத்து" - செங்கோட்டையன் அறிவிப்பு

சுருக்கம்

mla meeting cancelled says sengottayan

அதிமுகவில் பிரிந்து இருந்த இரு அணியினரும் ஒன்று சேரும் நிலை உருவாகியுள்ளது. இதனால், துணை பொது செயலாளர் டிடிவி.தினகரன் தரப்பில், தனது ஆதரவு எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்களுடன் நேற்று இரவு முதல் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இரு அணிகளும் ஒன்று சேர்வதால், தேர்தல் ஆணையத்தில் இருந்து இரட்டை இலை சின்னத்தை மீட்க முடியும் என அதிமுகவினர் தெரிவிக்கின்றனர். ஆனால், இதற்கு டிடிவி.தினகரன் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக கூறப்படுகிறது.

இதைதொடர்ந்து இன்று மதியம், டிடிவி தினகரன் தலைமையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

அனால் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், "அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்த முடியாது" என்று கூறினார்.

இன்று மாலை 3 மணிக்கு எம்எல்ஏக்கள் கூட்டம் நடக்கும் என்று தினகரன் அறிவித்திருந்த நிலையில் அமைச்சர் செங்கோட்டையன் கூட்டம் நடத்த முடியாது என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஓ.பி.எஸ்- டிடிவி.தினகரனுக்கு அமித் ஷா போடும் முட்டுக்கட்டை..! தவெகவுக்கு செக் வைக்கும் அமமுக..!
திமுக மீது தவெகவின் திடீர் கரிசனம்.. டெல்லியில் நடந்த மனமாற்றம்..! அடியோடு மாறிய நிர்வாகிகள்..!