"எடப்பாடியை 420 எனக் கூற எனக்கு பயமில்லை" - டிடிவி தினகரன் அதிரடி!!

 
Published : Aug 14, 2017, 01:28 PM ISTUpdated : Sep 19, 2018, 01:01 AM IST
"எடப்பாடியை 420 எனக் கூற எனக்கு பயமில்லை" - டிடிவி தினகரன் அதிரடி!!

சுருக்கம்

ttv dinakaran says about edappadi

ஜெயலலிதா இருந்தபோது அமைதியாக இருந்தவர்களை இப்போது அடக்க ஆளில்லை என்றும் எடப்பாடியை 420 எனக்கூற எனக்கு பயமில்லை என்றும் டிடிவி தினகரன் அதிரடியாக கூறியுள்ளார்.

மதுரை, மேலூரில் அதிமுக அம்மா அணி சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இதற்கு முன்பாக, டிடிவி தினகரன் இன்று காலை சுமார் 11.30 மணியளவில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், முதலமைச்சரை 420 எனக் கூற எனக்கு பயமில்லை என்று அதிரடியாக கூறியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானது ஒரு விபத்து. எங்களால் முதலமைச்சர் ஆக்கப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி. அவரை 420 எனக் கூற எனக்கு பயமில்லை. பதவி இருக்கின்ற காரணத்தால் ஆடுகிறார்கள். 

அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்தரியிலும் குடைப்பிடிப்பான் என்று சொல்வார்கள். அப்படித்தான் இருக்கிறது இவர்களின் செய்கைகள்.

ஜெயலலிதா இருந்தபோது, அமைதியாக இருந்தவர்ளை, இப்போது அடக்க ஆளில்லை. தவறு செய்பவர்கள் அனைவரும் திருத்தப்படுவார்கள். மூக்கணாங் கயிறு போட்டு அவர்களை அடக்குவோம். எடப்பாடி பழனிசாமி யார் என்பதை இன்று மாலை கூறுவேன் என்று டிடிவி தினகரன் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

அதிமுக பொதுக்குழு, செயற்குழுவில் தள்ளு முள்ளு.. நிகழ்ச்சி அரங்கில் பரபரப்பான சூழல்..
ஈரோட்டில் செம்ம மாஸ் காட்டும் செங்கோட்டையன்..! மாநாட்டை மிரட்டி காட்டப் போவதாக ஆவேசம்