
சேகர் ரெட்டியுடன் தங்கள் உறவினர்களுக்கு தொடர்பு இருப்பதால் சிறைக்கு சென்று விடுவோம் எனவும் அதனால் சசிகலாவை பார்க்க தான் வரவில்லை எனவும் எடப்பாடி தன்னிடம் கூறியதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று அதிமுக பொதுச்செயலாளராக இருந்த சசிகலா பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் உள்ளார்.
அவர் கைதாகும் முன்பு முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை முன்னிருந்தி சென்றார். அதன்படி முதலமைச்சராக எடப்பாடியை தேர்வு செய்து ஜெயிக்க வைத்தனர் அதிமுக எம்.எல்.ஏக்கள்.
ஆனால் அந்த முதல்வர் பதவியை டிடிவி பிடுங்க பார்த்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி அமைச்சர்களுடன் கூட்டு சேர்ந்து ஒபிஎஸ்சை கைகோர்த்து டிடிவியை கட்சியை விட்டு வெளியே அனுப்பினார்.
ஆனால் கட்சியை மீட்டெடுப்போம் என டிடிவி 18 எம்.எல்.ஏக்களுடன் துணையோடு போராடி வருகிறார். ஆனால் இதுவரை கட்சியை கைப்பற்றிய பாடு இல்லை.
தேர்தல் ஆணையத்தில் இதுகுறித்து பிரமாண பத்திரங்கள் குவிந்த வண்ணம் உள்ளன. தேர்தல் ஆணையமும் விரிவான விளக்கம் தர மறுத்து வருகிறது.
இதனிடையே சசிகலா சிறைக்கு சென்றதும் டிடிவியும், அமைச்சர்களும் சசிகலாவை சென்று பார்த்து நலம் விசாரித்தனர். ஆனால் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி மட்டும் ஒரு தடவை கூட சசிகலாவை சென்று பார்க்க வில்லை.
அதற்கான விளக்கத்தை தற்போது டிடிவி தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த டிடிவி , சேகர் ரெட்டியுடன் தங்கள் உறவினர்களுக்கு தொடர்பு இருப்பதால் சிறைக்கு சென்று விடுவோம் எனவும் அதனால் சசிகலாவை பார்க்க தான் வரவில்லை எனவும் எடப்பாடி தன்னிடம் கூறியதாக தெரிவித்தார்.
இதை சசிகலாவிடம் தான் கூறியதாகவும், அதற்கு எடப்பாடி இதை முன்கூட்டியே கூறியிருந்தால் கேஸ் இல்லாதவர்களை பார்த்து முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்திருக்கலாமே என சசிகலா கூறியதாகவும் தெரிவித்தார்.
தான் எந்த ஒப்பந்ததாரரிடம் கையெழுத்திடவில்லை எனவும் தற்போது எதிர்ப்பவர்கள் தான் எங்கள் குடும்பத்தை ஜெயலலிதா தள்ளி வைப்பதற்கு காரணம் எனவும் டிடிவி தினகரன் குறிப்பிட்டார்.