
60 நாட்கள் நேரம் தருகிறேன் அதற்குள் இரு அணிகளும் இணைய வேண்டும் என டிடிவி கூறினார் ஆனால் இப்போது அவரே முட்டுக்கட்டையாக செயல்பட்டு வருகிறார் என வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் டிடிவி தினகரன் சிறைக்கு சென்றார். அப்போது டிடிவி கட்சியில் இருந்து ஒதுக்கப்படுவதாக எடப்பாடி அமைச்சரவை அறிவித்தது.
அதற்கேற்ப டிடிவியும் கட்சியில் இருந்து விலகி விட்டதாகவும் தெரிவித்தார். ஆனால் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்த டிடிவி நானும் கட்சியில் இருக்கேன் என கூறி செயல்பட்டார்.
இதனால் எடப்பாடி தரப்பு 40 க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் டிடிவியை சந்தித்தனர். டிடிவியின் பேச்சை ஏற்க எடப்பாடி அமைச்சரவை மறுப்பு தெரிவித்தது.
இதையடுத்து ஒபிஎஸ் அணியும் இபிஎஸ் அணியும் இணைய 60 நாட்கள் கெடு தருவதாகவும் இல்லையேல் தான் மீண்டும் கட்சி பொறுப்பை ஏற்று நடத்துவேன் என தெரிவித்தார்.
ஆனால் 60 நாட்களை தாண்டிய பிறகே இரு அணியும் ஒன்றாக இணைந்தது. இவர்களின் இணைப்புக்கு டிடிவி எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.பி.உதயகுமார், 60 நாட்கள் நேரம் தருகிறேன் அதற்குள் இரு அணிகளும் இணைய வேண்டும் என டிடிவி கூறினார் ஆனால் இப்போது அவரே முட்டுக்கட்டையாக செயல்பட்டு வருகிறார் என தெரிவித்தார்.