
தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதட்டமான சூழ்நிலையில், டில்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தார். இன்று மாலை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆளுநரை சந்தித்து பேச வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக தற்போது வரை சர்ச்சை எழுந்து வருகிறது. ஆனால் 72 நாட்கள் அப்போலோ மருத்துவமனையின் உள்ளே யாரையும் அனுமதிக்காமல் சசிகலா கட்டி காத்து வந்தார்.
அவர் மறைவிற்கு பிறகு பொதுச்செயலாளர் பதவியையும் முதலமைச்சர் பதவியையும் எப்படியாவது அடைய வேண்டும் என முயற்ச்சி செய்த சசிகலா யானைக்கு அடி சறுக்கும் என்பது போல சறுக்கி ஜெயிலுக்குள் சென்று விட்டார்.
ஆனால் அவரால் நியமிக்கப்பட்ட துணை பொதுச்செயலாளர் டிடிவிக்கு அவ்வளவு வலு இல்லை போலும். சசிகலா வகுத்து கொடுத்த இடத்தை தக்க வைத்து கொள்ள முடியவில்லை.
சில நாட்களிலேயே துணை பொதுச்செயலாளர் பதவியை இழந்து ஜெயிலுக்கும் சென்றார் டிடிவி. இதையடுத்து தனக்கு துரோகம் செய்து விட்டதாக கூறி எடப்பாடியுடன் இருந்த 18 எம்.எல்.ஏக்களை தன் பக்கம் திருப்பினார்.
அதன் விளைவு தற்போது 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், ஏதாவது ஆளுநர் முடிவெடுப்பார் என எதிர்பார்த்திருந்த டிடிவி குரூப்க்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆளுநர் டில்லி சென்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கையும், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தையும் சந்தித்து பேசினார்.
இந்நிலையில், இன்று தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார் ஆளுநர். தமிழக அரசியல் நிலவரம் குறித்து இன்று மாலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்தடுத்து தமிழகத்தில் என்ன நடக்கும் என்று மக்களை பதட்டத்துலையே வச்சிருக்கும் நிலை தொடர்ந்து வருகிறது.