எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பிரதமர்  நரேந்திர மோடி...!

Asianet News Tamil  
Published : Sep 19, 2017, 03:01 PM ISTUpdated : Sep 19, 2018, 01:12 AM IST
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பிரதமர்  நரேந்திர மோடி...!

சுருக்கம்

PM Modi is attending the MGR Centenary - R.P. Udayakumar

தமிழகத்தில் டிசம்பர் மாதம் நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ளவிருப்பதாக அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், கடம்பூர் ராஜூ கூட்டாக பேட்டி அளித்துள்ளனர்.  

எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றதை அடுத்து, டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை சபாநாயகர் தனபால் நேற்று தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

சபாநாயகரின் இந்த உத்தரவு குறித்து பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மற்றும் செய்தி - விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, சென்னையில் இன்று கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், சபாநாயகர் தனபாலின் முடிவை விமர்சிக்க எனக்கு தகுதி கிடையாது என்றார். 

அணிகள் இணைய கெடு விதித்த டிடிவி தினகரன், அணிகள் இணைந்த பின் விமர்சிப்பது சரியல்ல என்றும் கூறினர்.

வரும் டிசம்பர் மாதம் நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில், பிரதமர் நரேதிர மோடி கலந்து கொள்வதாக அவர்கள் தெரிவித்தனர். 

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா சிறப்பாக நடைபெற வேண்டும் என்பதே ஜெயலலிதாவின் எண்ணம் என்றும் அவர்கள் கூறினர்.

PREV
click me!

Recommended Stories

தேர்தலுக்கு முன்பே மாற்றப்படும் செல்வப்பெருந்தகை..? டெல்லிக்கு போன ரிப்போர்ட்..!
ஆசிரியர் உயிரை பறித்த திமுக அரசு.. கொஞ்சம் கூட கவலையின்றி Vibe செய்யும் ஸ்டாலின்.. இபிஎஸ் ஆவேசம்!