முன் ஜாமின் வாங்கினார் முன்னாள் அமைச்சர் - கைது செய்ய தடை...!

Asianet News Tamil  
Published : Sep 19, 2017, 03:47 PM ISTUpdated : Sep 19, 2018, 01:12 AM IST
முன் ஜாமின் வாங்கினார் முன்னாள் அமைச்சர் - கைது செய்ய தடை...!

சுருக்கம்

high court order to police donot arrest ex minister palaniyappan

ஒப்பந்ததாரர் சுப்ரமணியனை தற்கொலைக்கு தூண்டியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் பழனியப்பனுக்கு முன் ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

நாமக்கல் மோகனூர் சாலையில் வசித்து வந்தவர் சுப்பிரமணியன். இவர், அரசு ஒப்பந்ததாரராக செயல்பட்டு வந்தார். அரசு கட்டிடங்கள், மருத்துவக் கல்லூரி கட்டிடங்கள் உள்ளிட்டவற்றின் கட்டுமானப் பணிகளுக்கு பெரும்பாலும் இவர்தான் ஒப்பந்ததாரராக இருந்து வந்துள்ளார். 

ஒப்பந்ததாரர் சுப்பிரமணியன், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நெருக்கமாக இருந்தவர். அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியபோது, இவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக சென்னை வருமான வரித்துறை சுப்பிரமணியனுக்கும் சம்மன் அனுப்பியது. இதனை அடுத்து விசாரணைக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். 

இதையடுத்து தனது மோகனூர் தோட்டத்தில் இறந்த நிலையில் சுப்பிரமணியன் உடல் கண்டெடுக்கப்பட்டது.  அவரது கையில் உள்ள கடிதத்தில் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் பெயர் இடம்பெற்றிருந்தது. 

இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பனுக்கு சம்மன் அனுப்பபட்டது. 

ஆனால் இரண்டு முறை சம்மன் அனுப்பியும் அவர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கவில்லை. இதனால் அவர் மீது பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. 

இதையடுத்து போலீசார் பழனியப்பனை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். இதனிடையே  பழனியப்பன் வழக்கறிஞர் அவருக்கு முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். 

மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் முன்னாள் அமைச்சர் பழனியப்பனுக்கு முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. 
 

PREV
click me!

Recommended Stories

இந்தியாவின் சோழவம்சத்தின் பெருமை..! வரலாற்றை அசிங்கப்படுத்திய ஒவைசி..!
விஜய்க்கு 'கை' கொடுத்த ராகுல்.. கூட்டணிக்கு அச்சாரமா? பிரவீன் சக்கரவர்த்தி சொன்ன விளக்கம்!