வெற்றிவேல்கிட்ட நான் சொன்னேன்..! அவர் கேட்கல..! - கூலா பதில் சொல்லும் தினகரன்...!

 
Published : Dec 21, 2017, 06:49 PM ISTUpdated : Sep 19, 2018, 01:43 AM IST
வெற்றிவேல்கிட்ட நான் சொன்னேன்..! அவர் கேட்கல..! - கூலா பதில் சொல்லும் தினகரன்...!

சுருக்கம்

ttv dinakaran said I gave a video to the winner in March

வெற்றிவேலிடம் நான் மார்ச் மாதமே வீடியோவை கொடுத்தேன் எனவும் மனம் தாங்காமல் வீடியோவை வெளியிட்டதாக அவர் தெரிவித்தார் எனவும்  டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

எங்களை கேட்காமல் வெற்றிவேல் வீடியோவை வெளியிட்டது வருத்தம் அளிப்பதாகவும் வீடியோ இருப்பது முதலமைச்சர் உட்பட அனைத்து அமைச்சர்களுக்கும் தெரியும் எனவும் குறிப்பிட்டார். 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி சென்னை, அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு, லண்டன் டாக்டர், டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள், அப்போலோ டாக்டர்கள் என சிகிச்சை அளித்தனர். 75 நாட்கள் சிகிச்சை பெற்று ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி உயிரிழந்தார். ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டது. 

இதைதொடர்ந்து சென்னை, அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படும் வீடியோ ஒன்று டிடிவி தினகரன் தரப்பு ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டுள்ளார். 

இதனால் பெரும் சர்ச்சை எழும்பியுள்ளது. இதற்கான பதிலை இன்று மாலை டிடிவி வெளியிடுவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், வெற்றிவேலிடம் நான் மார்ச் மாதமே வீடியோவை கொடுத்தேன் எனவும் மனம் தாங்காமல் வீடியோவை வெளியிட்டதாக அவர் தெரிவித்தார் எனவும்  தெரிவித்தார். 

அதற்கு இதை வெளியிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. வீடியோ உங்களிடம் தான் உள்ளது. இதை நீங்கள் விசாரணை ஆணையத்தில் கொடுத்திருக்கலாம் என அவரிடம் கூறியதாக தெரிவித்தார். 

மேலும் எங்களை கேட்காமல் வெற்றிவேல் வீடியோவை வெளியிட்டது வருத்தம் அளிப்பதாகவும் வீடியோ இருப்பது முதலமைச்சர் உட்பட அனைத்து அமைச்சர்களுக்கும் தெரியும் எனவும் குறிப்பிட்டார். 
 

PREV
click me!

Recommended Stories

இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!
திமுக- காங்கிரஸ் செய்த வரலாற்றுப் பிழை.. நடுக்கடலில் தவிக்கும் மீனவர்கள்.. இபிஎஸ் வேதனை!