வீடியோ எடுத்தது சசிதான்...!  - உண்மையை வெளியிட்டார் டிடிவி...! 

 
Published : Dec 21, 2017, 06:28 PM ISTUpdated : Sep 19, 2018, 01:43 AM IST
வீடியோ எடுத்தது சசிதான்...!  - உண்மையை வெளியிட்டார் டிடிவி...! 

சுருக்கம்

DDV Dinakaran said that he was not a member of the J-Video because he was a candidate.

ஜெயலலிதா சிகிச்சை குறித்த வீடியோ பிப்ரவரியில் இருந்து எங்களிடம் தான் உள்ளது எனவும் வேட்பாளராக இருந்ததால் ஜெ வீடியோ குறித்து தன்னால் கருத்து தெரிவிக்க முடியவில்லை எனவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி சென்னை, அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு, லண்டன் டாக்டர், டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள், அப்போலோ டாக்டர்கள் என சிகிச்சை அளித்தனர். 75 நாட்கள் சிகிச்சை பெற்று ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி உயிரிழந்தார். ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டது. 

இதைதொடர்ந்து சென்னை, அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படும் வீடியோ ஒன்று டிடிவி தினகரன் தரப்பு ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டுள்ளார். 

இதனால் பெரும் சர்ச்சை எழும்பியுள்ளது. இதற்கான பதிலை இன்று மாலை டிடிவி வெளியிடுவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், எனக்காக பணியாற்றிய ஆதரவாளர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்வதாகவும் எங்களுக்கு உறுதுணையாக இருந்த ஆர்.கே.நகர் மக்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்வதாகவும் தெரிவித்தார். 

ஜெயலலிதா சிகிச்சை குறித்த வீடியோ பிப்ரவரியில் இருந்து எங்களிடம் தான் உள்ளது எனவும் வேட்பாளராக இருந்ததால் ஜெ வீடியோ குறித்து தன்னால் கருத்து தெரிவிக்க முடியவில்லை எனவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

ஜெயலலிதா கேட்டுக்கொண்டதின் பேரிலேயே வீடியோ சசிகலாவால் எடுக்கப்பட்டது எனவும் வீடியோ இருப்பது அமைச்சர்கள் சிலருக்கு முன்கூட்டியே தெரியும் எனவும் குறிப்பிட்டார். 

ஜெ மறைவிற்கு பிறகு ஜெவை கொலை செய்தது சசி குடும்பம் தான் என திமுக நிர்வாகிகள் பொய் பிரச்சாரம் செய்து வந்ததாகவும் விசாரணை ஆணையம் கேட்காமல் வீடியோவை நாங்களாக தரமாட்டோம் என ஏற்கனவே பேட்டியில் தெரிவித்திருந்தோம் எனவும் கூறினார். 

ஜெ.சிகிச்சை வீடியோவை வெளியிட சசிகலா விரும்பவில்லை எனவும் அதை வெளியிட்டுதான் வாக்கு சேகரிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை எனவும் தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!