மன்னிப்பு கேட்டு கதறினார் ஓபிஎஸ்!! பேட்டியில் போட்டுடைத்த தினகரன்...

Published : Oct 05, 2018, 12:26 PM ISTUpdated : Oct 05, 2018, 12:29 PM IST
மன்னிப்பு கேட்டு கதறினார் ஓபிஎஸ்!! பேட்டியில் போட்டுடைத்த தினகரன்...

சுருக்கம்

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியை கலைப்பது தொடர்பாக, டிடிவி தினகரனை சந்தித்துப் பேச, துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் நேரம் கேட்டதாக, தங்க.தமிழ்ச்செல்வன் வெளியிட்ட தகவல், தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக டிடிவி தினகரன் பேட்டியளித்துள்ளார். நான் திகார் சிறையில் வந்த பிறகு ஓபிஎஸ் என்னை வந்து சந்தித்தார் என்று தினகரன் கூறியுள்ளார். என்னுடன் இணைந்து எடப்பாடியை எதிர்ப்பதற்கு தயாராக இருந்தார் என்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். கடந்த ஆண்டு ஓபிஎஸ் என்னை சந்தித்தது எனது நிர்வாகிகள் அனைவருக்கும் தெரியும், ஆனால் அரசியல் காரணங்களுக்காக நான் வெளியில் சொல்லாமல் இருந்தேன் என்றார். எனக்கு முக்கியமான பதவியை கொடுக்க தயாராக இருப்பதாக ஓபிஎஸ் தூது விட்டார் என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு முதலமைச்சர் ஆக வேண்டும் என்பது தான் ஒரே குறிக்கோள் என்றார். அமைச்சர் தங்கமணி கூறியதற்கு அவரிடம் ஆதாரம் இருந்தால் அதனை முதலில் வெளியிடட்டும் என்று டிடிவி தினகரன் பேட்டியளித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

41 பேரை கொன்று குவித்த நடிகர் விஜய் பின்னால் செல்வது ஏன்..? கிறிஸ்தவ மத முதல்வர் காட்வின் எதிர்ப்பு.. தவெக அதிர்ச்சி..!
எச்சில் கறியை உண்ட சிவபெருமான் இந்து இல்லையா..? எம்.பி., சு.வெங்கடேசன் சர்ச்சை பேச்சு..!