
டெங்கு நோயால் ஆயிரக்கணக்கான மரணங்கள் வந்துவிட்ட நிலையில், இனி அரசை நம்பி பிரயோஜனம் இல்லை எனவும், அரசுக்கே டெங்கு வந்த விட்ட பிறகு அந்த அரசு எப்படி நம்மை டெங்கு நோயில் இருந்து காப்பாற்றும் எனவும் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கில் மரணமடைந்து வருகின்றனர்.
ஆனால் தமிழக அரசோ டெங்கு கட்டுக்குள் இருப்பதாகவே பேட்டி அளித்து வருகிறது.
இந்நிலையில், டிடிவி தினகரன் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், டெங்கு எனும் கொடிய நோயை கட்டுப்படுத்த ஒவ்வொருவரும் செயல்பட வேண்டிய தருணம் இது எனவும், ஜெ ஆட்சியில் இருக்கும் போது சுகாதாரத்துறையில் தமிழகம் முதன்மையாக இருந்தது எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த கொடிய நோய்க்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும், டெங்கு நோயால் ஆயிரக்கணக்கான மரணங்கள் வந்துவிட்ட நிலையில், இனி அரசை நம்பி பிரயோஜனம் இல்லை எனவும், குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அரசுக்கே டெங்கு வந்த விட்ட பிறகு அந்த அரசு எப்படி நம்மை டெங்கு நோயில் இருந்து காப்பாற்றும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.