பன்னீர் மகனுக்கு எதிராக தினகரன் வெச்சாரு பாருங்க செக் அதான் அரசியல்! நொந்து போன நேரத்திலும் எதிரியின் கெத்தை விட்டுக்கொடுக்காத நீலகிரி நிர்வாகிகள்!

By Vishnu PriyaFirst Published Mar 23, 2019, 4:00 PM IST
Highlights

கடந்த 2016 நாடாளுமன்ற தேர்தல் துவங்கிய நேரம். தனித்து நிற்பது! என முடிவெடுத்த ஜெயலலிதா, தனது தலைமை நிர்வாகிகளை அழைத்து ஹெவி உத்தரவுகள் சிலவற்றைப் போட்டார். அப்போது ‘நீலகிரியில் ஆ.ராசா தோற்கணும், தோற்றே ஆகணும். நம்ம வெற்றியை தவிர அங்கே வேறெந்த ரிசல்ட்டும் இருக்க கூடாது. அந்தளவுக்கு ஃபீல்டை கவனியுங்க.’ என்றார் . ’நிச்சயமா அம்மா! கண்டிப்பா நீலகிரி வெற்றியை உங்க கால்ல வைக்கிறோம்மா!’ என்று தலையாட்டிவிட்டு வெளியே வந்தனர் நிர்வாகிகள். 
 

கடந்த 2016 நாடாளுமன்ற தேர்தல் துவங்கிய நேரம். தனித்து நிற்பது! என முடிவெடுத்த ஜெயலலிதா, தனது தலைமை நிர்வாகிகளை அழைத்து ஹெவி உத்தரவுகள் சிலவற்றைப் போட்டார். அப்போது ‘நீலகிரியில் ஆ.ராசா தோற்கணும், தோற்றே ஆகணும். நம்ம வெற்றியை தவிர அங்கே வேறெந்த ரிசல்ட்டும் இருக்க கூடாது. அந்தளவுக்கு ஃபீல்டை கவனியுங்க.’ என்றார் . ’நிச்சயமா அம்மா! கண்டிப்பா நீலகிரி வெற்றியை உங்க கால்ல வைக்கிறோம்மா!’ என்று தலையாட்டிவிட்டு வெளியே வந்தனர் நிர்வாகிகள்.

அப்போது சிட்டிங் எம்.பி. எனும் கெத்துடன் ‘மீண்டும் நீலகிரி எனக்கே!’ என்றபடி களமிறங்கிய ராசாவை அதிர அதிர தோற்கடித்தனர் ரத்தத்தின் ரத்தங்கள். மற்ற எல்லா தொகுதி வெற்றிகளையும் விடவும், நீலகிரி தொகுதி வெற்றியியை  பெரியளவில் ரசித்தார் ஜெயலலிதா. 

காரணம், ராசா மீது இருந்த ஈகோதான். அப்படி என்ன செய்துவிட்டார் ராசா?...ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கின் சூத்ரதாரி தி.மு.க. அந்த வழக்கை எப்படி கொண்டு போனால் எப்படியெல்லாம் ஜெ.,வை கார்னர் பண்ணலாம் என்பதில் பல நுணுக்கங்களை ஆராய்ந்து, சட்ட விஷயங்களை எடுத்துக் கொடுத்ததில் ராசாவின் பங்கு அலாதி. இதை ஒற்றர்கள் மூலம் தெரிந்து வைத்திருந்தார் ஜெ., மேலும் தான் ரசித்து வாழும் மற்றொரு வீடான கோடநாடு பங்களா இருப்பதால் நீலகிரியை தன் தாய் மண்ணாகவே நினைப்பது ஜெ.,வின் வழக்கம். அந்த தொகுதியில் தன் மிக முக்கிய அரசியல் எதிரியான ராசா மீண்டும் ஜெயிப்பதை ஜெ., விரும்பவில்லை. இதுவும் அவரது ஈகோவுக்கான முக்கிய காரணம். 

அதனால்தான் ராசாவின் தோல்வியால் பெரிதாய் மகிழ்ந்தார்  ஜெயலலிதா.

 அந்த வகையில் நீலகிரி தொகுதியானது தங்களுக்கு மிக மிக முக்கிய தொகுதி என்பது ஜெயலலிதாவின் மறைவுக்கு பிந்தைய அ.தி.மு.க.வுக்கும் நன்றாகவே தெரியும். ‘அம்மா வழியில் நடக்கும் ஆட்சி’ என்று சொல்லிக் கொள்ளும் அவர்கள், இவ்வளவு தெரிந்திருந்தும் கூட இந்த தேர்தலில் அம்மாம் பெரிய ஆ.ராசாவை எதிர்த்து, தியாகராஜன் எனும் ஒரு அறிமுகமில்லா வேட்பாளரை நிறுத்தியுள்ளனர். ஜெயலலிதாவின் உண்மை விசுவாசிகளை இந்த அறிவிப்பு முடக்கிவிட்டது. ’அம்மாவின் ஈகோவை அலட்சியப்படுத்திட்டாங்க! ஆ.ராசா எந்த காலத்திலும் இந்த மண்ணில் ஜெயிக்கவே கூடாதுன்னு நினைத்தவர் அம்மா. தான் இருந்தபோது இங்கே எவ்வளவு டம்மி வேட்பாளரை நிறுத்தினாலும் கூட, தன்னுடைய டாப் பிரசாரத்தின் மூலம் கட்சியை ஜெயிக்க வைத்தார். ஆனால் அம்மா இல்லாத நிலையில், எவ்வளவு டாப் வேட்பாளரை வைத்தாலுமே ராசாவோடு போட்டி போடுவது சிரமம் எனும் நிலையில், இப்படியொரு நீலகிரி மண்ணுக்கு அறிமுகமில்லாத நபரை கொண்டு வந்து நிறுத்தியிருப்பது இப்பவே தோல்வி பயத்தை தருது. 

தியாகராஜன் எனும் தனி நபரை நாங்க குற்றம் சாட்டலை. ஆனால் நீலகிரி மண்ணிற்கும், தரைப்பகுதியில் வரும் மூன்று தொகுதிக்கும் அறிமுகமான பாப்புலரான ஒரு நபரை ராசாவுக்கு எதிராக நிறுத்தி கடுமையான சவாலை கொடுத்திருக்கணும். பன்னீர் மகனுக்கு எதிரா தினகரன் வெச்சாரு பாருங்க செக். அதுதான் அரசியல். ஆனா இவங்க செஞ்சிருக்கிறது பெயர் அலட்சியம், துரோகம்.

 ஒருவேளை இங்கே கட்சி தோற்றால், அது அம்மாவின் மரியாதைக்கு எங்க கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள், துணை ஒருங்கிணைப்பாளர்கள் செய்த பச்சை துரோகம். எழுதி வெச்சுக்குங்க. அம்மாவின் ஆன்மா இவங்களை மன்னிக்காது.” என்று பொங்குகிறார்கள். 
ராசா கவனிக்க!

click me!