
இந்த அரசே செயல்படவில்லை என்றும், அவர்களுக்குள்ளே பயம் உள்ளது. அதற்காகத்தான் மேஜையைத் தட்டி தங்களின் பயத்தை போக்கிக் கொள்வதாகவும் சில அமைச்சர்கள் என்னைப் பார்த்தும், பார்க்காததுபோல குனிந்து கொள்வதாகவும் எம்.எல்.ஏ. தினகரன் கூறினார்.
2018 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் திங்கள்கிழமை தொடங்கியது. தமிழக ஆளுநராகப் பதவியேற்றப் பின் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்துகொள்ளும் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இது.
தொண்டர்களின் உற்சாக கோஷங்களுக்கு மத்தியில் நான்காம் கேட் வழியாக தினகரன் சட்டப்பேரவைக்குள் சென்றார். பேரவையில் தினகரனுக்கு 148 வது சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் முதன் முறையாக சட்டமன்ற கூட்டத்தில் கலந்து கொண்ட டிடிவி தினகரன், கூட்டம் முடிந்த பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது பேசிய அவர்,
முதன்முறையாக சட்டமன்ற கூட்டத்தில் கலந்துகொண்ட தினகரன், கூட்டம் முடிந்த பின்னர், ஆளுநர் உரை குறித்து செய்தியாளர்களிடம் பேசினார். ஆளுநர் உரையில் முக்கிய பிரச்சனைகள் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை என்றும் ஒக்கி புயலில் காணாமல்போன 22 மீனவர்களை பற்றி எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை எனவும் தினகரன் தெரிவித்தார். அரசாங்கத்தை ஆதரிக்குமாறு கவர்னர் பேசினதே தவறு எனவும் அவர்களுக்கு பெரும்பான்மை இருக்கிறதா? என்பதைதான் முதலில் கேட்டிருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
111 சட்டமன்ற உறுப்பினர்கள்தான் உள்ளனர் என்றும் மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிடாமல் அரசு எழுதி கொடுத்ததை ஆளுநர் படிக்கிறார் என்று கூறினார். முதல் கூட்டம் என்பதால், முழுமையாக கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் தான் கலந்து கொண்டதாகவும் கூறினார்.
இந்த அரசே செயல்படவில்லை என்றும், அவர்களுக்குள்ளேயே பயம் உள்ளது என்றார். அதற்காகத்தான் மேஜையைத் தட்டி தங்களின் பயத்தை போக்கிக் கொள்வதாகவும் கூறினார். நித்திய கண்டம் பூரண ஆயுசாக உள்ளது என்றும் விரைவில் இந்த ஆட்சி கவிழும் என்றும் கூறினார். சில அமைச்சர்கள் என்னைப் பார்த்து, பார்க்காதது போல குனிந்து கொள்கிறார்கள் என்றும் டிடிவி தினகரன் கூறினார்.