
எடப்பாடிக்கே இந்த ஆட்சியின் மீது நம்பிக்கையில்லை: சபைக்கு வெளியே சவுண்டு விட்ட தினகரன்.
ஆர்.கே.நகர் தொகுதியில் அமோகமான வெற்றியை பெற்றுவிட்ட பிறகு ஒரு எம்.எல்.ஏ.வாக முதன் முறையாக சட்டசபைக்கு சிங்கிள் சிங்கமாக வந்தார் தினகரன்.
ஆளுநர் உரைக்குப் பின் சபை நடவடிக்கை முடிந்து வெளியே வந்த தினகரன் “பெரும்பான்மையை நிரூபிக்கிறதுக்கு வாய்ப்பற்ற எண்ணிக்கையில்தான் அரசுக்கு ஆதரவான உறுப்பினர்கள் இருக்கிறாங்க. இந்த நிலையில கவர்னர் இங்கே வந்து உரையாற்றியிருக்க வேண்டியதில்லை. அதுவே தப்பு. ஆனாலும் முதல் கூட்ட தொடராச்சேன்னு நான் கலந்துக்கிட்டேன்.
அரசு இன்னைக்கு கொடுத்திருக்கிற உறுதிமொழிகள் அத்தனையும் பொத்தாம் பொதுவா இருக்குது. சாதனையா, பவர்ஃபுல்லா ஒண்ணுமேயில்லை. போக்குவரத்து துறை தொழிலாளர்கள் அப்படியொரு போராட்டம் நடத்திட்டு இருக்கிறாங்க, மக்கள் அவஸ்தை மேல் அவஸ்தை பட்டுக்கிட்டிருக்காங்க. ஆனால் அரசுக்கு அதைப்பற்றி கவலையில்லை.
எடப்பாடி பழனிசாமிக்கே தன்னோட அரசு மீது நம்பிக்கை இல்லைங்கிறது தெளிவா தெரியுது. இன்றைக்கு வழங்கியிருக்கிற அறிவிப்பு பட்டியல்ல பல திட்டங்களை எதிர்பார்க்கிறோம், நம்புகிறோம்ன்னுதான் சொல்லியிருக்காங்களே தவிர உறுதியா எதையுமே அழுத்திச் சொல்லலை.
ஆக முதல்வருக்கே இந்த அரசு தொடர்ந்து ஓடும்னு நம்பிக்கையில்லாத நிலையில இருக்கிறதாலே கூடிய சீக்கிரமே கவிழ்ந்துடும் அப்படிங்கிறது தெளிவா தெரியுது.”